அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹானர் 8 லைட்.!

By Prakash
|

தற்சமயம் இந்தியாவில் ஹவாய் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஹவாய் ஹானர் 8 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஹவாய் ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதன்பின்பு கருப்பு மற்றும் நீல வண்ண வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

ஹானர் 8 லைட்:

ஹானர் 8 லைட்:

ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம்

கொண்டவையாக உள்ளது, மேலும் 2.5 டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரின் 655 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

இந்த ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு இப்போது ரூ.15,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999-ஆக இருந்தது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 8 Lite Gets a Price Cut in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X