Home
Mobile

தனித்து நிற்கும் தலைசிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்!?

பொதுவாக ஆப்பிள் ஐபோன் கேமராக்கள் தலைசிறந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையை மாற்றும் அதி நவீன கேமரா கொண்ட ஆண்ட்ராய்டு கருவி சார்ந்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்..

By Meganathan

ஸ்மார்ட்போன்களின் துவக்கக் காலத்தில் இருந்து இன்று வரை அவற்றில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களில் துவங்கி, அதன் செயல்பாடு, இயக்கம் என எல்லாவற்றிலும் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல்களை நாம் கடந்து வந்து விட்டோம். இன்றைய கருவிகளில் கேமிங், மல்டி டாஸ்கிங் அதிக துல்லியமான புகைப்படங்கள் என அனைத்துச் சவால்களும் மிக எளிதாக நிறைவேற்ற முடிகின்றது.

ஸ்மார்ட்போன்களின் கேமரா குறித்த மேம்படுத்தல்கள் சில காலமாக அதிகரிக்கும் ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் தலைசிறந்த கேமரா கொண்ட கருவியாக ஹூவாய் ஹானர் 8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் 'Point and Shoot' வகை கேமரா வழங்கப்பட்டுள்ளது.

12+12 எம்பி டூயல்-லென்ஸ் கேமரா

12+12 எம்பி டூயல்-லென்ஸ் கேமரா

ஹானர் 8 கருவியில் 12 எம்பி டூயல் லென்ஸ் அமைப்பு கொண்ட கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லென்ஸ் சிறந்த நிறங்களைப் பிரதிபலிக்கும், மற்றொரு மோனோக்ரோம் லென்ஸ் அதிக வெளிச்சம் மற்றும் மேம்படுத்தப்பட்ட துல்லியத்தை வழங்கும்.

இரு லென்ஸ்களும் தலை சிறந்த புகைப்படங்களை வழங்குகின்றன. டூயல் லென்ஸ் செட்டப் குறைந்த வெளிச்சங்களிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க வழி செய்கின்றன. இதில் வழங்கப்பட்டிருக்கும் ஹைப்ரிட் ஆட்டோ-ஃபோகஸ் தொழில்நுட்பம் குறைந்த இடைவெளியிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க வழி செய்கின்றது.

வீடியோ

வீடியோ

ஹானர் 8 கருவியில் புகைப்படங்களை எடுப்பதோடு இல்லாமல் வீடியோக்களை படமாக்கவும் மேனுவல் பயன்படுத்த முடியும். மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ப்ரோ மோட் அம்சமும் வழங்கப்படுகின்றது. இதனால் அதிக துல்லியமான வீடியோக்களை படமாக்க முடியும்.

முதல் முறை

முதல் முறை

கேமரா ஆப் நீண்ட நேர எக்ஸ்போஷர் வழங்கும் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் 'Light Painting' மோட் வித்தியாசமான படங்களை பிரதிபலிக்கின்றது. அதிக துல்லியமான மற்றும் இயற்கையான புகைப்படங்களை ஹானர் 8 கேமரா ஆப் வழங்குகின்றது.

இயக்கம்

இயக்கம்

ஹானர் 8 சுப்ரீம் கேமரா வன்பொருள் தலைசிறந்த ஆப் மூலம் செயல்படுகின்றது. இதனால் கேமராவினை இயக்குவது முன்பை விட எளிமையாக இருக்கின்றது. இதன் கேமரா ஆப் அம்சங்கள் அதிகப்படியான மோட் மற்றும் ஃபில்டர்களை பயன்படுத்த முடிகின்றது.

தலைசிறந்த கேமரா

தலைசிறந்த கேமரா

ஹானர் 8 கருவியின் கேமரா எவ்வித வெளிச்சங்களிலும் அதி சிறந்த புகைப்படங்களை எடுக்க வழி செய்கின்றது. இதன் டூயல் லென்ஸ் கேமரா செட்டப் இயற்கையாகக் காட்சியளிக்கும் புகைப்படங்களை எடுக்கத் தலைசிறந்த ஒன்றாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
honor 8 camera is miles ahead the competition
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X