நேரடி மோதல் : ஹானர் 7 எக்ஸ் VS சியோமி மிஏ1; எது பெஸ்ட்.?

|

கடந்த ஒரு வருடத்தில் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் பிரிவில் சில வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்தன. ரூ.18கே என்கிற பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை விரைவாக ஏற்றுக்கொண்டது. அவைகளில் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே மற்றும் இரட்டை கேமரா அமைப்புமுறைகளை குறிப்பிட்டு கூறலாம். பிளாக்ஷிப் கருவிகளுக்கான ஹை-எண்ட் அம்சங்கள் என்று இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இடம்பெற தொடங்கின.

அதில் மிகவும் ஒரு சுவாரசியமான ஸ்மார்ட்போன் தான் ஹானர் 7எக்ஸ். ஒரு மேம்பட்ட இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு கொண்ட ஒரு உயரமான 18: 9 திரை விகிதம் திரையில் கொண்ட இக்கருவி சூப்பர்-பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமானது. இதற்கு போட்டியாய் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் வெளியானது. இந்த இரண்டில் எது பெஸ்ட்.? என்ற கேள்விக்கு பதில் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் சரியான இடத்தில தான் உள்ளீர்கள். வாருங்கள் ஒப்பீடு செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம்.

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே

வடிவமைப்பு என்று வரும்போது ஹானர் 7எக்ஸ் ஒரு தெளிவான வெற்றியை பெறும். இந்த் ஸ்மார்ட்போன் 5.99 அங்குல முழுஎச்டி+ டிஸ்பிளே மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது, இது நவீன அனுபவத்தை தருகிறது, மறுகையில் உள்ள சியோமி மி ஏ1 ஆனது நிறுவனத்தின் அதே பாரம்பரிய வடிவமைப்பை தான் கொண்டுள்ளது. மி ஏ1 ஆனது ஒரு நிலையான 16: 9 என்கிற திரை விகிதத்தையே கொண்டுள்ளது. இது இன்றைய தரநிலையுடன் ஒத்திசைந்து போகாததுடன், ஒரு அதிவேக மல்டிமீடியா அனுபவத்தை வழங்குவதிலும் தோல்வியடைகிறது. 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் உயரமான முழுஎச்டி+ திரையானது 0சிறந்த பிக்சல் அடர்த்தியை வழங்குகிறது மற்றும் வீடியோ பின்னணி, இணைய உலாவுதல் மற்றும் விளையாட்டுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

பேட்டரி மற்றும் நினைவகம்

பேட்டரி மற்றும் நினைவகம்

நல்ல பேட்டரி காப்பு மற்றும் சிறந்த வெளிப்புற சேமிப்பு ஆதரவு விடயத்திலும் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனை ஹானர் 7 எக்ஸ் மிஞ்சுகிறது. மி ஏ1 ஆனது 3,080எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டிருக்க ஹானர் 7எக்ஸ் ஆனது ஒ0ரு பெரிய 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. சேமிப்புத்துறையை பொறுத்தமட்டில், இரண்டு கருவிகளும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பை வழங்குகிறது. இருப்பினும், 7எக்ஸ் ஸ்மார்ட்போன் உள் நினைவக நீட்டிப்பு ஆதரவானது 256ஜிபி ஆகும், அதாவது சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனை விட இரண்டு மடங்கு அதிகம்.

இரட்டை-லென்ஸ் கேமரா அமைப்புx

இரட்டை-லென்ஸ் கேமரா அமைப்புx

இந்த ஒப்பீட்டில் விடயங்கள் இன்னும் சுவாரசியமானவையாகிறது. சியோமி ஒரு 12எம்பி + 12எம்பி பின்புற கேமரா கொண்டிருக்க ஹானர் 7எக்ஸ் ஆனது ஒரு 16எம்பி + 2எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இரண்டு கருவிகளின் இரட்டை லென்ஸ்களுமே இயலுமை கொண்டது தான். ஆனால் சியோமி ஒரு 12எம்பி டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது, அது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறனை வழங்குகிறது. மறுகையில் உள்ள அதன் ஹானர் 7 எக்ஸ்-ன் 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் ஆனது ஆழமான தகவல் அளிக்குமே தவிர எந்த ஆப்டிகல் பெரிதாக்கமும் அளிக்காது. இமேஜ் தரத்தை பொறுத்தவரை, 16எம்பி முதன்மை கேமராவானது நல்ல படங்களை உற்பத்தி செய்கிறது.

செயலி மற்றும் மென்பொருள்

செயலி மற்றும் மென்பொருள்

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 சிபியூ உடன் சியோமி மி ஏ1 கருவியும், நிறுவனத்தின் சொந்தமான ஹைசிலிகான் கிரின் 659 சிப்செட் உடன் ஹானர் 7எக்ஸ் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டுமே ஆக்டா-கோர் சிப்செட் கொண்டிருந்தாலும், ஸ்னாப்ட்ராகன் 625 ஆனது சமீபத்திய 14என்எம் உற்பத்தி செயல்முறை அடிப்படையாக கொண்டது. ஆனால் கிரின் 659 சிபியூ ஆனது 16என்எம் உற்பத்தி செயல்முறையின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பற்றி பேசுகையில், சியோமி மி ஏ1 ஆனது ஆண்ட்ராய்டு நௌவ்கட் அனுபவத்தை வழங்குகிறது மறுகையில் உள்ள ஹானர் 7எக்ஸ் ஆனது தனிப்பயனாக்கப்பட்ட இஎம்யூஐ 5.1 (ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான) கொண்டு வருகிறது. நீங்கள் சிறப்பான மென்பொருள் கூட்டணியை விரும்பினால், ஹானர் 7எக்ஸ் ஒரு நல்ல தேர்வாகும், சிறப்பான ஆண்ட்ராய்டு அனுபவத்தை விரும்பினால் மி ஏ1 ஒரு நல்ல தேர்வாகும்.

முடிவு

முடிவு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா புள்ளிகளையும் பார்த்தும் உங்களால் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரமுடியவில்லை என்றால் இரண்டு கருவியின் விலை நிர்ணயங்களை ஒப்பீட்டு பாருஙகள். ஹானர் 7எக்ஸ் ஆனது ரூ. 12,999/-க்கு கிடைக்கிறது. இது சரியாக சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனை விட ரூ.1,000/- குறைவாகும். சிறந்த வடிவமைப்பு, மிருதுவான காட்சி, பெரிய பேட்டரி மற்றும் சிறந்த சேமிப்பு அம்சங்கள் ஆகியவைகளை பொறுத்தமட்டில் ஹானர் 7எக்ஸ் சிறப்பான ஒரு தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Honor 7X and Xiaomi MiA1 sports Dual lens cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X