5.93-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 7எக்ஸ் அறிமுகம்.!
ஹானர் 7எக்ஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் கிரின் 659 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஹவாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் 5.93-இன்ச் டிஸ்பிளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள்
இடம்பெற்றுள்ளன.

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை 32ஜிபி மற்றும் 64ஜிபி மெமரி முறையே ரூ.12,890 மற்றும் ரூ.16,850-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5.93-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.93-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
ஹானர் 7எக்ஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் கிரின் 659 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஹானர் 7எக்ஸ ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3340எம்ஏஎச்:
ஹானர் 7எக்ஸ்; ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications