இந்தியா : அசத்தலான ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.!
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்சமயம் இந்தியாவில் ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாக வாங்க முடியும். மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஹானர் 7எக்ஸ் ரெட் லிமிடெட் பதிப்பு பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதன்பின்பு இக்கருவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 18:9 என்ற திரைவிகிதத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஹானர் 7எக்ஸ் அம்சங்கள்:
இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஹானர் 7எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்கும். இதுவொரு யூனிபாடி உலோக வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட மற்றும் குறைந்த பெஸல் இடம்பெறும் வளைந்த 5.93 அங்குல முழு எச்டி+ (1080x2160 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது.


உள்ளடக்க மெமரி:
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின் கூடதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர்:
இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம், கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஹானர் 7எக்ஸ் :
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த அருமையான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications