Home
Mobile

வெறும் ரூ.12,999/-க்கு ஹானர் 7எக்ஸ்.! காலியானது சியோமி ரெட்மீ வரிசை.!

ஹானர் 6எக்ஸ் போன்றே, ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டு வருகிறது, இது போக்கே விளைவுகளை கைப்பற்றஅனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.!

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், இறுதியாக இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனை ஒரு நம்பமுடியாத விலைப்புள்ளியின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் ஹைஎண்ட் சாதனமான ஹானர் 7எக்ஸ் வெறும் ரூ.12,999/-க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் ரூ.12,999/-க்கு ஹானர் 7எக்ஸ்.! காலியானது சியோமி ரெட்மீ வரிசை.!

ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து வெளியாகும் ஹானர் 7எக்ஸ் ஆனது ஒரு அனைத்து உலோக வடிவமைப்பு, பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு மற்றும் விலைக்கு மீறிய சக்தி வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.

சியோமி மி ஏ1, மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் கருவிகளுக்கு கடுமையான போட்டி.!

சியோமி மி ஏ1, மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் கருவிகளுக்கு கடுமையான போட்டி.!

மிக முக்கியமாக, ஹானர் 7எக்ஸ் ஆனது ஒரு விரிவான 18: 9 காட்சி விகிதத்தின் கீழ் பெஸல்லெஸ் வடிவமைப்பை பெற்றுள்ளது. வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தேதி முதல் அமேசான் இந்தியா வழியாக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும். சியோமி மி ஏ1 மற்றும் மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் ஆகிய கருவிகளுக்கு, ஹானர் 7எகஸ், கடுமையான போட்டியை உண்டாகும் என்பதை இதன் அம்சங்களை பற்றிய முழு விவரங்களை அறிந்தபின்ன்ர உங்களுக்கே புரியும்.

பெஸல்களுக்கு பிரியாவிடை.!

பெஸல்களுக்கு பிரியாவிடை.!

இக்கருவி, ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை போன்றே பெஸல்லெஸ் வடிவமைப்பும், ஒரு மேட் பின்பக்கம் மற்றும் உலோக உடலமைப்பை கொண்டுள்ளது. ஒரு கம்பீரமான மற்றும் பிரீமியம் தோற்றத்தை உறுதி செய்கிறது.

பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கான கைரேகை சென்சார்.!

பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கான கைரேகை சென்சார்.!

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்க உடலில் எந்த பொத்தான்களும் இல்லை, அனைத்தும் மெய்நிகர் விசைகள் தான். நோட்டிபிகேஷன்களை ஸ்லைட் செய்வது உட்பட பல வேலைகளை குறைப்பதற்கான மற்றும் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு கைரேகை சென்சாரும் இக்கருவியை இடம்பெற்றுள்ளது.

எட்ஜ்-டூ-எட்ஜ்ம்பி டிஸ்பிளே

எட்ஜ்-டூ-எட்ஜ்ம்பி டிஸ்பிளே

ஹானர் 7எக்ஸ் ஆனது 2160x1080 (முழு எச்டி ப்ளஸ் ) என்கிற தீர்மானம் கொண்ட மற்றும் 18: 9 என்கிற விகிதத்திலான 5.9 அங்குல டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் குறைந்த முன்பக்க பெஸல்கள் ஒரு வழக்கமான 5.5 இன்ச் டிஸ்பிளேவை, 5.9 இன்ச் டிஸ்ப்ளேவாக வடிவ மாற்றம் செய்துள்ளது.

கேமிங் மற்றும் மல்டிமீடியா பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.!

கேமிங் மற்றும் மல்டிமீடியா பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.!

பிராகாசமான, துல்லியமான மற்றும் பிரீமியமான உணர்வை அளிக்கும் வண்ணம் இதன் டிஸ்பிளே 2.5டி கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும். இதன் 18: 9 என்கிற விகிதம் கேமிங் மற்றும் மல்டிமீடியா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இக்கருவியின் மேல் மற்றும் கீழ் பெஸல்களானது எல்ஜி ஜி6 அல்லது கேலக்ஸி எஸ்8 போன்ற ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அளவிற்கு சிறியதாக இல்லை என்றாலும் கூட இந்த அளவிலான மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த கருவியாக ஹானர் 7எக்ஸ் திகழும்.

இதர அம்சங்கள் மற்றும் மென்பொருள்.!

இதர அம்சங்கள் மற்றும் மென்பொருள்.!

ஹானர் 7எக்ஸ் அதன் விலையை மீறிய மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த ஹைசிலிகான் கிரின் 659 சிப்செட் உடனான 4ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. மற்றும் நிறுவனத்தின் கூற்றுப்படி 12 மணி நேர வீடியோ பின்னணி மற்றும் 91 மணி இசை பின்னணியை வழங்கும் ஒரு 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.

32ஜிபி அல்லது 64ஜிபி என்கிற உள்ளடக்க சேமிப்பு.!

32ஜிபி அல்லது 64ஜிபி என்கிற உள்ளடக்க சேமிப்பு.!

மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 32ஜிபி அல்லது 64ஜிபி என்கிற உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. மென்பொருளைப் பொறுத்தவரை, ஹானர் 7எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) அடிப்படையிலான நிறுவனத்தின் தனிபயன் கஸ்டம் இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான இஎம்யூஐ 8 கொண்டு எப்போது புதுப்பிக்கப்படும் என்பது தெரியவில்லை.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

ஹானர் 7எக்ஸ் ஆனது 4ஜி வோல்ட், டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மற்றும் க்ளோநாஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. யூஎஸ்பி-க்குப் பதிலாக சார்ஜ் செய்ய மற்றும் தரவு பரிமாற்றத்திற்கான ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இருப்பது ஒரு பெரிய பின்னடைவாகும்.

இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி.!

இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி.!

இன்றைய ஸ்மார்ட்போன்களில் அகற்றப்படும் ஒரு அம்சமான 3.5மிமீ ஹெட்ஜாக், இக்கருவியில்ரு இடம்பெற்றுள்ளதென்பதில் இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி. மற்றொரு ஏமாற்றமாக இக்கருவி ஒரு கலப்பு சிம் ஸ்லாட் கொண்டு வருகிறது. இதன் அர்த்தம் நீங்கள் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, உள் சேமிப்புகளை விரிவாக்கும் நோக்கத்திலான மைக்ரோஎஸ்டி அட்டையை பயன்படுத்த முடியாது.

இரட்டை கேமராக்கள்

இரட்டை கேமராக்கள்

ஹானர் 6எக்ஸ் போன்றே, ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டு வருகிறது, இது போக்கே விளைவுகளை கைப்பற்றஅனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. பின்பக்கம் ஒரு முதன்மை 16எம்பி சென்சார் உள்ளது உடன், ஆழமான காட்சிகளை கைப்பற்றும் நோக்கம் கொண்ட ஒரு 2எம்பி இரண்டாம்நிலை சென்சார் கொண்டுள்ளது.

பில்டர்ஸ், டைம் லேப்ஸ்,  லைட் பெயிண்டிங் மற்றும் பல

பில்டர்ஸ், டைம் லேப்ஸ், லைட் பெயிண்டிங் மற்றும் பல

முன்பக்கம், ஒரு 8எம்பி சென்சார் வருகிறது. இதுவொரு ஒற்றை முன்பக்க சென்சார் கொண்டுள்ள போதிலும், மென்பொருள் வழிமுறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால் பின்பக்கத்தினை போலவே செல்பீ கேமராவும் பொக்கே விளைவு காட்சிகளை ஏற்படுத்தும். இதன் கேமரா பயன்பாடானது,பில்டர்ஸ், டைம் லேப்ஸ், லைட் பெயிண்டிங், ஸ்லோ மோஷன் வீடியோ கேப்ச்சர் மற்றும் பனோரமா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் ஐஎஸ்ஓ, எக்ஸ்போஷர், ஷட்டர் ஸ்பீட் மற்றும் பலவற்றில் விளையாட அனுமதிக்கக்கூடிய முழுமையான ப்ரோ பயன்முறையும் உள்ளது.

விலை மற்றும் கிடைக்கும்தன்மை.!

விலை மற்றும் கிடைக்கும்தன்மை.!

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.12,999/- ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன், வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி மத்திய 12 மணி முதல் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக விற்பனையாகும். ப்ளூ, கோல்ட் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஹானர் 7எக்ஸ் மொத்தம் இரண்டு மாறுபாடுகள் உள்ளன - 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு - ரூ.12,999/- மறுகையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு - ரூ.15,999/- ஆகும்.!

Best Mobiles in India

English summary
Honor 7X launched in India: Specs, dual cameras, bezel-less design and more. Read more about this Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X