மிட்-ரேன்ஜ் விலையில், இந்திய சந்தைக்குள் புயலாய் நுழையும் ஹானர் 7எக்ஸ்.!

Written By:

சீனாவில் அக்டோபர் மாதம், ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் அறிமுகம் செய்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஹானர் 7எக்ஸ் ஆனது இன்று (செவ்வாயன்று) அதன் இந்திய விற்பனையை தொடங்குகிறது.

மிட்-ரேன்ஜ் விலையில், இந்திய சந்தைக்குள் புயலாய் நுழையும் ஹானர் 7எக்ஸ்

இன்று லண்டனில் நடக்கும் ஹானர் வி10 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டில் ஹானர் 7எக்ஸ்-ன் இந்திய அறிமுகமும் அறிவிக்கப்படும். சீனாவில் கடந்த வாரம் ஹானர் வி10 வெளியானது மறுகையில் உள்ள ஹானர் 7எக்ஸ் வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் வருகிற வியாழன் அன்று (டிசம்பர் 7 ஆம் தேதி) அமேசான் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சங்களாக அதன் பெரிய 18: 9 என்கிற திரை விகிதத்திலான டிஸ்ப்ளே மற்றும் அதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு ஆகியவைகளை கூறலாம்

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் 32 ஜிபி மாறுபாடானது தோராயமாக ரூ.12,890/- என்கிற புள்ளியை எட்டலாம். மறுகையில் உள்ள 64ஜிபி மாறுபாடானது சுமார் ரூ.16,850/- என்கிற விலைக்கும் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடானது சுமார் ரூ.19,820/-க்கும் விற்பனைக்கு வரலாம்.

வண்ண விருப்பங்கள்

வண்ண விருப்பங்கள்

மேற்குறிப்பிட்டுள்ள சீன விலைப்புள்ளியை ஒட்டியே தான் இந்திய விலை நிர்ணயமும் இருக்குமென்பது கிட்டத்தட்ட நிச்சயம் என்றாலும் கூட, இந்தியாவில் அதன் அனைத்து சேமிப்பு மாறுபாடுகளும் வெளியாகுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இக்கருவி அரோரா ப்ளூ, கோல்ட் மற்றும் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹானர் 7எக்ஸ் அம்சங்கள்

ஹானர் 7எக்ஸ் அம்சங்கள்

இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஹானர் 7எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்கும். இதுவொரு யூனிபாடி உலோக வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட மற்றும் குறைந்த பெஸல் இடம்பெறும் வளைந்த 5.93 அங்குல முழு எச்டி+ (1080x2160 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 3340எம்எஏச் பேட்டரி

4ஜிபி ரேம் மற்றும் 3340எம்எஏச் பேட்டரி

ஹானர் 7எக்ஸ் ஒரு அக்வா-கோர் ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி (4 x கார்டெக்ஸ்- ஏ53 கோர்ஸ் உடனான 2.36ஜிகாஹெர்ட்ஸ் + 4 x கார்டெக்ஸ்- ஏ53 கோர்ஸ் உடனான 1.7ஜிகாஹெர்ட்ஸ்) உடனான 4ஜிபி ரேம் மற்றும் 3340எம்எஏச் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமராக்கள்

டூயல் ரியர் கேமராக்கள்

இக்கருவியில் கைரேகை ஸ்கேனர் பின்புறம் தள்ளப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்கிற டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

முன்னர் குறிப்பிட்டபடி, ஹானர் 7எக்ஸ் ஆனது மொத்தம் மூன்று சேமிப்பு வகைகளில் வருகிறது: 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி. இந்த மாறுபாடுகள் அனைத்தும் கலப்பின இரட்டை சிம் உள்ளமைவிலான மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தை வழங்குகின்றன. உடன் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1 மற்றும் ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு அம்சங்களையும் வழங்குகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Honor 7X India Launch Set for Today, Alongside Honor V10 Global Launch. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot