Home
Mobile

இந்திய அறிமுகம் : போட்டிபோட முடியாத விலை மற்றும் அம்சங்களுடன் ஹானர் 7எக்ஸ்.!

ஹானர் 7 எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் அதன் ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் மாதம் அறிவித்ததில் இருந்து, ஹானர் 7எகஸ் சாதனத்தின் "இந்திய வருகை எப்போது.?" என்பது தான் இந்திய ஸ்மார்ட்போன் உலகின் ஹாட் டாபிக் ஆகும்.!

போட்டிபோட முடியாத விலை மற்றும் அம்சங்களுடன் ஹானர் 7எக்ஸ்.!

அந்த எதிர்பார்ப்பிற்கு தீனிபோடும் வண்ணம் தகவலொன்று வெளியாகியுள்ளது. ஆம், ஹானர் 7 எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதுவும் போட்டியிட முடியாததொரு விலை நிர்ணயத்தில் அறிமுகமாகவுள்ளது என்பது கிடைத்த தகவலின் கூடுதல் போனஸ் ஆகும்.!

ஹானர் 7எக்ஸ்.!

ஹானர் 7எக்ஸ்.!

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக உருமாறும் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதி தான் ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே.!

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே.!

ஒருபக்கமிருக்க மறுபக்கம் நிறுவனம் அதன் ஆஃப்லைன் சில்லறை சேனல்களை மேம்படுத்துவதற்கும், மார்க்கெட்டிங் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனை பயன்படுத்திக்கொள்ளவுள்ளது.

5.93 முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

5.93 முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

ஆக மொத்தம் ஹானர் 7எக்ஸ் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே கிடைக்கும் என்பது உறுதி. ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், 18: 9 விகிதம் மற்றும் 1080x2160 பிக்சல் என்ற தீர்மானம் கொண்ட 5.93 முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

4ஜிபி ரேம் + 32 ஜிபி.!

4ஜிபி ரேம் + 32 ஜிபி.!

ஹானர் 7எக்ஸ் ஆனது 1.7ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரீன் (HiSilicon Kirin) 659 செயலி உடன் இணைந்த 4ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

கேமராக்களை பொறுத்தவரையில், ஹூவாய் ஹானர் 7எக்ஸ் ஆனது அதன் பின்புறத்தில் ஒரு 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 2எம்பி இரண்டாம்நிலை கேமரா என்ற இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கம் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

3340எம்ஏஎச் அளவிலான நீக்கமுடியாத பேட்டரி.!

3340எம்ஏஎச் அளவிலான நீக்கமுடியாத பேட்டரி.!

ஆண்ட்ராய்டு 7.0 கொண்டு இயங்கும் இக்கருவி ஒரு 3340எம்ஏஎச் அளவிலான நீக்கமுடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. அளவீட்டில் இது 156.50 x 75.30 x 7.60 (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 165.00 கிராம் எடையும் கொண்டுள்ளது. இரட்டை நானோ-சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) ஸ்லாட்களையும் கொண்டுள்ளது

இணைப்பு விருப்பங்கள்.!

இணைப்பு விருப்பங்கள்.!

இக்கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகியவைகளை கொண்டுள்ளது. சாதனத்தின் சென்சார்களை பொறுத்தமட்டில், காம்பஸ் மேக்னெடோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் க்யுரோஸ்கோப் ஆகியவைகள் அடங்கும்.

விலை நிர்ணயம்.!

விலை நிர்ணயம்.!

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், இதன் 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மாறுபாடானது முறையே சுமார் ரூ.12,890, சுமார் ரூ.16,850/- மற்றும் சுமார் ரூ.19,820/- என்ற விலைப்புள்ளியை பெறலாம். அடுத்தடுத்த ஹானர் 7எக்ஸ் சார்ந்த அப்டேட்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Honor 7X India launch set for December: Price, specifications and everything you need to know. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X