அக்டோபர் 11 : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் ஹானர் 7எக்ஸ்.!
இக்கருவி பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
ஹவாய் நிறுவனம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி ஹானர் 7எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது.

4ஜிபி ரேம்:
இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்ஆக்டோ-கோர் கிரின் 670 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 12மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவுஇவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
இக்கருவி 4000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, அதன்பின் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல இணைப்பு ஆதரவுகள் இவற்றில்இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications