5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹானர் 7எஸ் அறிமுகம்.!
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஹானர் நிறுவனம் தற்சமயம் ஹானர் 7எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் செப்டம்பர் 14-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா மட்டுமே பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் குறிப்பாக ஃபேஸ் அன்லாக் வசதி இதனுள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக
வரவேற்பை பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 7எஸ்:
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மெமரி:
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீடியோகேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
இக்கருவி மீடியாடெக் எம்டி6739 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கேமரா:
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.6,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications