Home
Mobile

ஹானர் 7எஸ் விபரக்குறிப்பு மற்றும் முக்கிய குறிப்பு.!

ஹானர் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

By Sharath

ஹானர் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஹானர் 7எஸ் விபரக்குறிப்பு மற்றும் முக்கிய குறிப்பு.!

சீன சந்தையில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீன சந்தையில் பட்ஜெட் விலையில் இந்த ஆண்டு அதிகமாக விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமை ஹானர் 7எஸ்-க்கே சேரும். அதே போல் குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பிருக்கிறது.

பட்ஜெட் விலையில் சிறந்த புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க அசத்தலான செல்பி 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹானர் 7எஸ் மாடலில் கணக்குளுக்கான ப்ரோடெக்ஷன் சேவை சேர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனில் தரவுகளைப் படிக்கும் போது டிஸ்ப்ளேவில் நீல நிற ஃபில்ட்டரை சேர்த்து உங்களின் கண்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

ஹானர் 7எஸ் விபரக்குறிப்புகள் :

- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 TFT ஃபுல் வியூ டிஸ்ப்ளே
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 5 எம்பி முன்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- கூடுதல் சேமிப்பு நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- EMUI 8.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி எல்.டிஇ, வைபை, ப்ளூடூத்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஃபேஸ் அன்லாக்
- 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்திய சந்தையில் ஹானர் 7எஸ் மாடலின் முதல் ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 12.00 மணிக்குத் துவங்குகிறது. ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் இன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஹானர் 7எஸ் பிளாக், ப்ளூ மற்றும் கோல்டு வண்ணத்தில் விற்பனைக்குக் கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Honor 7S smart phone in india specs and price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X