5.99-இன்ச் டிஸ்பிளே & டூயல் ரியர் கேமராவுடன் ஹானர் 7சி அறிமுகம்.!
ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர் தற்சமயம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். கருப்பு, சிவப்பு, தங்கம் மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது அசத்தலான ஹானர் 7சி.
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5.99-இன்ச் டிஸ்பிளே:
ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் 5.99-இன்ச் டிஎப்டி எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:
இக்கருவி 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு :
இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் 3ஜிபி/ 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, கைரேகை சென்சார், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


விலை:
ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் இந்திய விலை மதிப்பு ரூ.9,235. அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் இந்திய விலை மதிப்பு ரூ.13,345-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications