Home
Mobile

மே 22: டூயல் ரியர் கேமராவுடன் ஹானர் 7சி அறிமுகம்.!

இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஹானர் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஹானர் 10 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.99-இன்ச் டிஸ்பிளே:

5.99-இன்ச் டிஸ்பிளே:

ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் 5.99-இன்ச் டிஎப்டி எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:

ஸ்னாப்டிராகன் 450:

இக்கருவி 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு :

சேமிப்பு :

இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் 3ஜிபி/ 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்: வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, கைரேகை சென்சார், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

How to check PF Balance in online (TAMIL)
விலை:

விலை:

ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் இந்திய விலை மதிப்பு ரூ.9,235. அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் இந்திய விலை மதிப்பு ரூ.13,345-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 7C India Launch Expected on May 22 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X