அமேசான்: ஜியோ சலுகையுடன் விற்பனைக்கு வருகிறது ஹானர் 7சி.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு வருகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஹானர் 7சி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் டூயல் கேமரா வசகளுடன் மலிவு விலையில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:
3ஜிபி ரேம் கொண்ட ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின்
விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் ஜியோ கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 7சி :
ஹானர் 7சி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720x1440 பிக்சல்
திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்
ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல்
எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 164கிராம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications