அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்.!
இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் அந்த வரிசையில் ஹானர் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

3ஜிபி கொண்ட ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் 4ஜிபி ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

5.99-இன்ச் டிஸ்பிளே:
ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் 5.99-இன்ச் டிஎப்டி எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:
இக்கருவி 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு :
இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் 3ஜிபி/ 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, கைரேகை சென்சார், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications