Home
Mobile

மலிவு விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் ஹானர் 7சி.!

இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இரட்டை சிம் ஆதரவு பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

By Prakash S

இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சிறந்த அம்சங்களை கொண்டு வெளிவருகின்றன, குறிப்பாக டூயல் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு ஓரியோ, பேஸ்அன்லாக் போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவருகிறது, ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மலிவு விலையில்
சிறந்த அம்சங்களை கொடுக்கும் வண்ணம் உள்ளது. ஸ்மார்ட்போன்களை வாங்கும் முன்பு அவற்றின் சிறந்த பாதுகாப்பு மற்றும் விலைக்கு தகுந்தபடி இருக்கும் சிறந்த அம்சங்கள் போன்றவற்றை கவனிப்பது மிகவும் நல்லது.

மலிவு விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் ஹானர் 7சி.!

ஹானர் நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் நிறுவனம்சில நாட்களுக்கு முன்பு ஹானர் 7சி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது,இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9,999-ஆக உள்ளது, அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் விலை மதிப்பு ரூ.11,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஹானர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே:

5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே:

ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
2.5 டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு மற்றும் 1440 x 720பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன்
18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங், வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும்
இன்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு ஆதரவு:

சேமிப்பு ஆதரவு:

இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இரட்டை சிம் ஆதரவு பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, குறிப்பாக 256ஜிபி மெமரி வரை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இயல்பான மெமரி திறனை விரிவாக்கும் திறனில் சமரசம் செய்யாமல் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த உதவுகிறது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் மிக அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிக எளிமையாக சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்க்கது. பின்பு இந்திய சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான கேமரா அமைப்பு:

அசத்தலான கேமரா அமைப்பு:

ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு பொறுத்தவரை அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும், அதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+ 2எம்பி டூயர் ரியர் கேமரா மற்றும்f/2.2 aperture ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு இந்த கேமரா அமைப்பு எல்இடி ஃப்ளாஷ் உடன் தொகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் 7சி ஸ்மார்ட்போன் ரியர் கேமரா பொறுத்தவரை அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த புகைப்படம் மற்றும் வீடீயோக்களை எடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. பின்பு இவற்றை இயக்க மிகவும் அருமையாக இருக்கும் என ஹானர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இரட்டை கேமரா அனைவரையும் ஈர்க்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

செல்பீ கேமரா மற்றும் பேஸ்அன்லாக் அமைப்பு:

செல்பீ கேமரா மற்றும் பேஸ்அன்லாக் அமைப்பு:

பட்ஜெட் விலையில் பேஸ்அன்லாக் அமைப்புடன் வெளிவந்த முதல் ஸ்மார்ட்போன் ஹானர் 7சி ஸ்மார்ட்போன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா அமைப்பு 8மெகாபிக்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல். மேலும் முன்புறம் சிறந்த வெளிச்சம் கொண்டுவர எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது.

பேஸ்அன்லாக் வசதி பொறுத்தவரை சமீபத்தில் அனைவருக்கும் பிடிக்கக்கூடிய அம்சமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி கூட இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. இந்த ஸ்கேன் அம்சங்கள் உங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கிறது.

கேமிங் மற்றும் ஸ்டூடியோ அனுபவம்:

கேமிங் மற்றும் ஸ்டூடியோ அனுபவம்:

ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, இந்த பேட்டரி ளுஅயசவீழறநச 5.0 தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது பல ஆற்றல் சேமிப்பு முறைகள், நீண்ட கால, மென்மையான மற்றும் இசைவான விளையாட்டு அனுபவத்தை வழங்குகிறது என ஹானர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் ஹெட்போன்களை பயன்படுத்தினால் சிறந்த ஸ்டூடியோ அனுபவம் தரும் வசதி கொண்டுள்ளது என ஹானர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த ஆடியோ வசதியுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் புளூடூத்:

டூயல் புளூடூத்:

ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் புளூடூத் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஒரே நேரத்தில் இரண்டு புளூடூத் சாதனங்களின் வழியாக ஆடியோ ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் ஸ்பீக்கர் இசை அனுபவிக்கும் போது நீங்கள் ஒரு சூழ்நிலையை சந்தித்திருக்கலாம் அல்லது நீங்கள் இன்னும் ப்ளூடூத் ஹெட்செட் மூலம் அழைப்புகள் பெற முடியும். மேலும் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Honor 7C Flagship class features and performance at a starting price of Rs 9999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X