முக அங்கீகாரம் & டூயல் கேமராவுடன் வெளிவரும் ஹானர் 7சி.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானரின் புதிய ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 12-ம் தேதி சீனாவில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹானரின் புதிய ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் ஆடியோ அம்சங்கள் பரிந்துரைக்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் கேமரா வசதி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, தங்கம், மற்றும் நீல நிறம் விருப்பங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 7சி :
ஹானர் 7சி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720x1440
பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் முக அங்கீகார தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 20எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


2900எம்ஏஎச்:
ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.16,300-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications