ரெட்மீ 5-க்கு குட்பை; டூயல் கேம் உடன் சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ அறிமுகம்.!
க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி உடனான 2ஜிபி / 3ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், இன்று அதன் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை, சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 7ஏ என்கிற பெயரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

அம்சங்களை பொறுத்தவரை, 7 ஹானர்ஏ ஆனது, 1440 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன், 18: 9 என்கிற அளவிலான பேனல் கொண்ட ஒரு 5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உடன் ஒரு 2.5டி கர்வுடு கிளாஸ் பாதுகாப்பும் கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி உடனான 2ஜிபி / 3ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது. இந்த இரண்டு வேரியன்ட்களுமே ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவை வழங்குகிறது.

டூயல் பின்பக்க கேமரா.!
வெளியான பல ஹானர் ஸ்மார்ட்போன்களை போலவே, ஹானர் 7ஏ-வும் டூயல் பின்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது. எப் / 2.2 துளை கொண்ட ஒரு 13எம்பி பிரைமரி சென்சார், மற்றும் ஒரு 2எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது. இதன் டெப்த் சென்சார் படங்களின் பின்னணியில் மங்கலான நிலையை சேர்க்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, எப் / 2.2 அப்பெர்ஷர் கொண்ட ஒரு 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டிலுமே, எல்இடி ப்ளாஷ் ஆதரவு உள்ளது, இது குறைந்த ஒளி நிலைகளில் கூட நல்ல படங்களை கைப்பற்ற உதவுகிறது.

3000எம்ஏஎச் பேட்டரி.!
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. வடிவமைப்பு வாரியாக, இது இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஹானர் 7எக்ஸ் போன்றே தெரிகிறது. இரட்டை சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது, ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. அளவீட்டில், ஹானர் 7ஏ ஆனது 7.8 மிமீ தடிமன் மற்றும் 150 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது

ரெட்மீ 5 உடன் கடுமையாக போட்டி.!
ஹானர் 7ஏ-வின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, சூப்பர் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அதன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் திகழ்கிறது. எப்படி பார்த்தாலும் ரூ.7,000/- பட்ஜெட்டில் இந்தியாவில் வெளியாகும் என்பதால், இது சியோமி நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ 5 உடன் கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதே சமயம் ரெட்மீ 5 ஆனது மிகவும் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

விலை.!
மொத்தம் 3 சேமிப்பு சேமிப்பு மாடல்களில் வெளியாகி உள்ள இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாடலின் விலை (தோராயமாக) ரூ.8,260/- என்றும், மறுகையில் உள்ள 3ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலாவ உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது (சுமார்) ரூ.10,333/- என்றும் இந்திய சந்தையை எட்டலாம். தற்போது வரையிலாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்திய வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications