ஏப்ரல் 2- ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் ஹானர் 7ஏ அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹூவாய் நிறுவனம். முதலில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்கப்படுகிறது. இக்கருவி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 7ஏ சாதனம் பெசல்லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே டூயல் கேமரா வசதியைக் கொண்டுள்ளது ஹானர் 7ஏ மாடல்.
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 ஒ 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஒஎஸ் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ எனக் கூறப்படுகிறது.
ஹானர் 7ஏ சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹானர் 7ஏ சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications