Home
Mobile

வெறும் ரூ.8,999/- முதல் ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி; சியோமி ரெட்மீ 5-க்கு டாட்டா.!

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர், இன்று புது டெல்லியில் நடந்த ஒரு தொடக்க நிகழ்வில், அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர், இன்று புது டெல்லியில் நடந்த ஒரு தொடக்க நிகழ்வில், அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் ரூ.8,999/-க்கு ஹானர் 7ஏ & ஹானர் 7சி; ரெட்மீ 5-க்கு டாட்டா.!

ஹானர் 7A மற்றும் ஹானர் 7C என்கிற பெயர்களை சுமந்து வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், ஸ்னாப்ட்ராகன் சிப்செட்களுடன் 2018 ஆம் ஆண்டில் வெளியாகும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான இந்த 2 ஸ்மார்ட்போன்களும், சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5 உடன் நேரடியாக போட்டியிடுகிறது.

வெறும் ரூ.8,999/-க்கு ஹானர் 7ஏ & ஹானர் 7சி; ரெட்மீ 5-க்கு டாட்டா.!

குறிப்பாக ஹான்ட் 7C ஆனது ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடன் வருகிறது. மறுகையில் உள்ள ஹானர் 7A ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்டை கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, அதன் பின்புறத்தில் டூயல் கேமரா, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.

ஹானர் 7C அம்சங்கள்:

ஹானர் 7C அம்சங்கள்:

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் நேரடி போட்டியாளரான ஹானர் 7C, இந்தியாவில் இரட்டை கேமராக்களோடு வெளியாகியுள்ளது. 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ள ஹானர் 7C, 5.99 அங்குல HD+ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடனாக 3 ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் உடனான 32 ஜிபி அல்லது 64 ஜிபி அளவிலான உள்ளாக்க சேமிப்பு கொண்டு இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 3000mAh பேட்டரி :

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 3000mAh பேட்டரி :

பின்பக்கத்தில், ஒரு 13MP சென்சார் உடனான ஒரு 2MP சென்சார் கொண்டுள்ளது, முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8MP செல்பீ கேமரா கொண்டுள்ளது. பின்பக்கத்தில் உள்ள இரண்டாம் நிலை சென்சார் ஆனது ஒரு டெப்த் சென்சார் ஆகும். அது போர்ட்ரேட் மோட்டை உருவாக்க உதவும். ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான EMUI 8.0 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், பேஸ் அன்லாக் அம்சத்தையும் வழங்குகிறது. ஒரு 3000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ப்ளூ மற்றும் கோல்ட் வண்ணவிருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

ஹானர் 7A அம்சங்கள்:

ஹானர் 7A அம்சங்கள்:

மறுகையில் உள்ள ஹானர் 7A, பட்ஜெட் வாசிகளை குறிவைத்து களம் இறங்கியுள்ளது. இது அதே 18: 9 விகிதம் கொண்ட சற்று சிறிய 5.7 அங்குல HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு சேமிப்பு மாடலில் மட்டுமே வெளியாகியுள்ளது. பின்பக்கத்தில் ஒரு 13MP முதன்மை கேமரா இரண்டாம் நிலை 2MP சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள் :

இணைப்பு ஆதரவுகள் :

முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8MP செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஹானர் 7C போன்றே ஹானர் 7A ஸ்மார்ட்போனும் ஒரு 3000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான EMUI 8.0 கொண்டு இயங்குகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4G LTE, VoLTE, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் கீழே ஒரு மைக்ரோ USB போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகின்றன.

How to check PF Balance in online (TAMIL)
விலை நிர்ணயம் :

விலை நிர்ணயம் :

ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டணி கொண்டுள்ள ஹானர் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.2,200/- என்கிற கேஷ்பேக் சலுகையை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. தவிர ஹானர் 7A ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் வாங்க கிடைக்கும், அதேசமயம் அமேசான் இந்தியாவில் ஹானர் 7C விற்கப்படும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஹானர் 7C ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாறுபாடு ஆனது ரூ 9,999/-க்கும், மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மாறுபடு ஆனது ரூ.11,999/-க்கும் வாங்க கிடைக்கும். ஹானர் 7A ஸ்மார்ட்போனை பொறுத்தவரை ரூ.8,999/-க்கு வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Honor 7A, Honor 7C Smartphones Launched in India, Prices Start at Rs 8,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X