ஷாக்கில் சியோமி; கடுப்பில் ஆப்பிள்; வெறும் ரூ.8,999/-க்கு பேஸ் அன்லாக், டூயல் கேம்.!
ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர், கடந்த செவ்வாய் அன்று புது டெல்லியில் நடந்த ஒரு தொடக்க நிகழ்வில், அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர், கடந்த செவ்வாய் அன்று புது டெல்லியில் நடந்த ஒரு தொடக்க நிகழ்வில், அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
ஹானர் 7A மற்றும் ஹானர் 7C என்கிற பெயர்களை சுமந்து வெளியாகியுள்ள அந்த ஸ்மார்ட்போன்கள், ஸ்னாப்ட்ராகன் சிப்செட்களுடன் 2018 ஆம் ஆண்டில் வெளியாகும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான இந்த 2 ஸ்மார்ட்போன்களும், சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5 உடன் நேரடியாக போட்டியிடுகிறது.

டூயல் கேமரா, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார்:
குறிப்பாக ஹான்ட் 7C ஆனது ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி உடன் வருகிறது. மறுகையில் உள்ள ஹானர் 7A ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்டை கொண்டுள்ளது. பின்புறத்தில் டூயல் கேமரா, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் மற்றும் பல நவீன கால அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களை நம்பி வாங்கலாமா என்று கேட்டால், அதற்கு பல நியாமான அம்சங்களை முன்வைக்க முடியும்.

ஹானர் 7C அம்சங்கள்:
சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் நேரடி போட்டியாளரான ஹானர் 7C, இந்தியாவில் இரட்டை கேமராக்களோடு வெளியாகியுள்ளது. 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ள ஹானர் 7C, 5.99 அங்குல HD+ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடனாக 3 ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் உடனான 32 ஜிபி அல்லது 64 ஜிபி அளவிலான உள்ளாக்க சேமிப்பு கொண்டு இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:
பின்பக்கத்தில், ஒரு 13MP சென்சார் உடனான ஒரு 2MP சென்சார் கொண்டுள்ளது, முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8MP செல்பீ கேமரா கொண்டுள்ளது. பின்பக்கத்தில் உள்ள இரண்டாம் நிலை சென்சார் ஆனது ஒரு டெப்த் சென்சார் ஆகும். அது போர்ட்ரேட் மோட்டை உருவாக்க உதவும்.

3000mAh பேட்டரி:
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான EMUI 8.0 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், பேஸ் அன்லாக் அம்சத்தையும் வழங்குகிறது. ஒரு 3000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ப்ளூ மற்றும் கோல்ட் வண்ணவிருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

ஹானர் 7A அம்சங்கள்:
மறுகையில் உள்ள ஹானர் 7A, பட்ஜெட் வாசிகளை குறிவைத்து களம் இறங்கியுள்ளது. இது அதே 18: 9 விகிதம் கொண்ட சற்று சிறிய 5.7 அங்குல HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு சேமிப்பு மாடலில் மட்டுமே வெளியாகியுள்ளது. பின்பக்கத்தில் ஒரு 13MP முதன்மை கேமரா இரண்டாம் நிலை 2MP சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள் :
முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8MP செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஹானர் 7C போன்றே ஹானர் 7A ஸ்மார்ட்போனும் ஒரு 3000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான EMUI 8.0 கொண்டு இயங்குகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4G LTE, VoLTE, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் கீழே ஒரு மைக்ரோ USB போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகின்றன.

கிடைக்கும் தன்மை:
ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டணி கொண்டுள்ள ஹானர் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.2,200/- என்கிற கேஷ்பேக் சலுகையை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. தவிர ஹானர் 7A ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் வாங்க கிடைக்கும், அதேசமயம் அமேசான் இந்தியாவில் ஹானர் 7C விற்கப்படும்.

விலை நிர்ணயம் :
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஹானர் 7C ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாறுபாடு ஆனது ரூ.9,999/-க்கும், மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மாறுபடு ஆனது ரூ.11,999/-க்கும் வாங்க கிடைக்கும். ஹானர் 7A ஸ்மார்ட்போனை பொறுத்தவரை ரூ.8,999/-க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications