நம்பமுடியாத விலையில் ஒரு பெஸ்ட் டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன் - ஹானர் 7ஏ.!

ஸ்மார்ட்போன்கள் ஆனது காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றபடி சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த ஒரு கருவியாக உருமாறிக்கொண்டே வருகிறது.

|

ஸ்மார்ட்போன்கள் ஆனது காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றபடி சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த ஒரு கருவியாக உருமாறிக்கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ.10,000/-க்குள் கூட உயர் இறுதியில் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கிறது. அப்படியாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் மட்டுமே திறனான அம்சங்களை வழங்குகின்றன.

ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகுறது, போட்டியும் கடுமையானதாகிவிட்டது. அதன் விளைவாக நுகர்வோர்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு மீது ஒன்றுமே புரியாத, அறியாத நிலைப்பாட்டில் தான் அதன் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டியதாய் உள்ளது. இனி அந்த அவசியம் இல்லை, ஒரு ஸ்மார்ட்போனை பற்றி மிக தெளிவாக அறிந்த பின்னரே அதை வாங்குங்கள், அதற்கு தமிழ் கிஸ்பாட் தளம் உங்களுக்கு உதவும். அப்படியாக இன்று ஒரு திறமையான கேமரா வன்பொருள் கொண்ட ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை பற்றி தான் நாம் ஆராய உள்ளோம். அது ஹானர் நிறுவனத்தின் 7ஏ ஆகும். இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

மென்மையான செல்பீ லைட்டிங் ப்ளாஷ்.!

மென்மையான செல்பீ லைட்டிங் ப்ளாஷ்.!

ரூ.8,999/-க்கு வாங்க கிடைக்கும் ஹானர் 7ஏ ஆனது நிறுவனத்தின் மிக மலிவான இரட்டை லென்ஸ் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஹேண்ட்செட் ஒரு 13எம்பி + 2எம்பி இரட்டை லென்ஸ் பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த கேமரா வன்பொருள் வழியாக இயக்கப்படும் பொக்கே விளைவை உருவாக்குகிறது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ஒரு 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இதன் மென்மையான செல்பீ லைட்டிங் ப்ளாஷ் ஆனது தெளிவான செல்பீக்களை உறுதி செய்கிறது.

பட்ஜெட் விலை புள்ளியில் ஈர்க்கக்கூடிய கேமரா வன்பொருள்.!

பட்ஜெட் விலை புள்ளியில் ஈர்க்கக்கூடிய கேமரா வன்பொருள்.!

இந்திய சந்தையில் மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன் இதுதான். இதன் தீவிர கூர்மையான இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பானது இயற்கைப் படத்தொகுப்பு விளைவுகளுடன் அழகான படங்களை கைப்பற்ற உதவுகிறது. மேலும் இதன் வன்பொருள் வழியிலான பொக்கே விளைவு வேலைகளை 2எம்பி இரண்டாம் நிலை கேமரா பார்த்துக்கொள்ளும்.

இருப்பிடம், தேதி மற்றும் நேரம்.!

இருப்பிடம், தேதி மற்றும் நேரம்.!

மேலும் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா ஆனது ஜியோ-டேகிங்கை (பூகோள-குறியிடுதலை) ஆதரிக்கிறது, இது ஒரு டிஜிட்டல் நேர முத்திரையாக செயல்படுகிறது, இது ஒரு கைப்பற்றப்பட்ட படத்தின் இருப்பிடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் கண்டறியும். தவிர, இதன் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பானது, நீங்களக் ஷட்டர் பொத்தானை டாப் செய்யும் ஒவ்வொரு முறையும் சரியான ஷாட்டை கைப்பற்ற அனுமதிக்கும் வண்ணம் டச் போகஸ் ஆதரவையும் வழங்குகிறது. உடன் சைகைகள் மற்றும் புன்னகை மூலமாக கூட ஷாட்களை கைப்பற்றலாம்.

குறைந்த ஒளி சூழ்நிலைகளில் கூட பிரகாசமான செல்பீக்கள்.!

குறைந்த ஒளி சூழ்நிலைகளில் கூட பிரகாசமான செல்பீக்கள்.!

ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்பீ கேமராவனது ரூ.10,000/- என்கிற விலை புள்ளிக்கு சம்மந்தம் இல்லாத ஒரு செல்பீ கேம்ராவாகும். இது பகல் நேரத்திலில் பளபளப்பான படங்களை பதிவு செய்யும் எப்/ 2.2 பரந்த துளையை கொண்டுள்ளது. மேலும் இதன் ஸ்மார்ட் சாப்ட் எல்ஈடி லைட் வழியாக இருண்ட இடத்திலும் கூட பிரகாசமான செல்ப்பீகளை எடுக்கலாம். வெளிச்சம் குறைந்தாலும் கூட தெளிவு மற்றும் விவரங்களில் குறைகள் இருக்காது.

எளிமையான கேமரா அம்சங்கள்.!

எளிமையான கேமரா அம்சங்கள்.!

முந்தைய ஹானர் ஸ்மார்ட்போன்கள் போன்ற, இதன் கேமரா ஆப் ஆனது பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. எளிமை மட்டுமின்றி நிறைய கேமரா அம்சங்களும் உள்ளன. இதன் கேமராவானது செயற்கை நுண்ணறிவின் கீழ் உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. குறிப்பாக போர்ட்ரெயிட் மோட், வைட் அப்பெஷர் மோட், பியூடிப்பை மோட் ஆகிய அனைத்தையும் வெறுமனே கேமரா ஸ்க்ரீனை ஸ்வைப் செய்வதின் வழியாக அணுகலாம். உடன் இந்த கேமரா ஆப் ஆனது ஸ்டாண்டர்ட் போட்டோ, ப்ரோ போட்டோ (மேனுவல் மோட்), வீடியோ, ப்ரோ வீடியோ, எச்டிஆர், நைட் ஷார்ட், பனோரமா, லைட் பெயின்டிங், டைம்-லேப்ஸ், பில்டர்ஸ் மற்றும் பல அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

ஒரு மெல்லிய மற்றும் ஸ்டைலான வடிவத்தில்.!

ஒரு மெல்லிய மற்றும் ஸ்டைலான வடிவத்தில்.!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது திறன்வாய்ந்த இரட்டை லென்ஸ் கேமராவை மட்டும் கொண்டிருக்கவில்லை. சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களையும் கொண்டுள்ளது. சிறந்த விலையின் கீழ் வாங்க கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஹானர் 7ஏ ஆனது 282பிபிஐ பிக்சல் அடர்த்தி, 16எம் கலர்ஸ் மற்றும் 75.4% ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. வேகமான கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஒரு சக்திவாய்ந்த 3,000 mAh பேட்டரி அலகுடன் வருகிறது. உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியிலான மெமரி விரிவாக்கம் (256 ஜிபி வரை), ஒரு சூப்பர்பாஸ்ட் ஆக்டா- கோர் ஸ்னாப்டிராகன் செயலி, 3ஜிபி ரேம், மற்றும் 32 ஜிபி ரோம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. ப்ளூ, பிளாக் அண்ட் கோல்ட் நிறங்களில் ஒரு மெல்லிய மற்றும் ஸ்டைலான வடிவத்தில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Honor 7A: Best Dual-lens smartphone available at an unbelievable price. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X