ஹானர் 7 - எல்ஜி ஜி3, எது பெஸ்ட்'னு பார்ப்போமா..??

Written By:

ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் கருவியை ஹானர் பிரான்ட் மூலம் அறிமுகம் செய்தது. முன்னதாக ஜீன் மாதத்தில் சீனா, ஐரோப்பாவில் வெளியிட்டு அதன் பின் இந்தியாவில் வெளியிட்டது.

ஹானர் 7 கருவியில் மெட்டல் பாடி, ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேனர் போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதோடு ஹானர் 7 சந்தையில் இருக்கும் மற்ற கருவிகளுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு ஹானர் 7 மற்றும் எல்ஜி ஜி3 கருவிகளை ஒப்பீடு செய்து சிறந்த கருவி எது என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு

வடிவமைப்பு

யுனிபாடி டிசைன் மற்றும் அலுமினியம் மெட்டல் கொண்டு மிகவும் நேர்த்தியாக ஹானர் 7 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கருவி அதிக உறுதியாகவும் இருக்கின்றது. எல்ஜி ஜி3 கருவியாநது பார்க்க மெட்டல் போன்று காட்சியளித்தாலும் உண்மையில் ப்ளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதை கையில் எடுக்கும் போது உணர முடியும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 7 கருவியில் 5.2 இன்ச் ஐபிஎஸ்-நியோ எல்சிடி டிஸ்ப்ளே 1920*1080பி ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளதால் எவ்வித வெளிச்சங்களிலும் திரையை எவ்வித தடையும் இன்றி பார்க்க முடியும். எல்ஜி ஜி3 கருவியில் 5.5 இன்ச் எச்டி-ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1440*2560 ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

ஹானர் 7 தனக்கே உரிய கிரின் 930 ஆக்டா கோர் செப்செட் மற்றும் 3ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது, மேலும் சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்க மாலி டி628ஜியுபி யுனிட் வழங்கப்பட்டுள்ளது. எல்ஜி ஜி3 கருவியானது குவால்காம் MSM8974AC ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் க்ரெய்ட் 400 ஜிபியு கொண்டிருக்கின்றது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஹானர் 7 தனக்கே சொந்தமான ஈஎம்யுஐ 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கின்றது. எல்ஜி ஜி3 கருவி ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4.2 இயங்குதளமும் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அப்கிரேடு ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

ஹானர் 7 கருவியில் 20 எம்பி ப்ரைமரி கேமரா, ஃபேஸ் டிடெட்க்ஷன் ஆட்டோஃபோகஸ், சோனி ஐஎம்எக்ஸ்230 சென்சார், 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி3 கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, ஃபேஸ் டிடெட்க்ஷன், லேசர் ஆட்டோஃபேகஸ், ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் டூயல் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2.1 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

ஹானர் 7 கருவியில் இரு வித மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 16 / 64 ஜிபி இன்டர்னெல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை மெமரியும் நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி3 கருவியிலும் 16 / 64 ஜிபி என இரு வித மெமரி ஆப்ஷன்களும் மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

ஹானர் 7 கருவியின் சிறந்த அம்சமாக கைரேகை ஸ்கேனர் ஆப்ஷனினை கூறலாம். கருவியின் பின்புறம் வழங்கப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனர் சரியான வேகத்தில் இயங்குகின்றது. எல்ஜி ஜி3 கருவியில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படவில்லை.

பேட்டரி

பேட்டரி

ஹானர் 7 கருவியில் 3100 எம்ஏஎச் பேட்டரி, வழங்கப்பட்டுள்ளதோடு இந்த கருவி 8 மணி நேரம் பேக்கப் வழங்கும் என தெரிவித்துள்ளது. எல்ஜி ஜி3 கருவியானது 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

விலை

விலை

ஹானர் 7 கருவி ரூ.22,999க்கும், எல்ஜி ஜி3 கருவி ரூ.30,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

முடிவு

முடிவு

இரு கருவிகளிலும் கச்சிதமான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டாலும் ஹானர் 7 கருவி கொடுக்கும் பணத்தில் கைரேகை ஸ்கேனர், மெட்டல் வடிவமைப்பு மற்றும் சில சிறப்பம்சங்களில் வெற்றி பெற்றுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Honor 7 vs LG G3: 10 Major Differences. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்