பல்வேறு அம்சங்களை வழங்கும் ஹானர் 7 கைரேகை ஸ்கேனர்..

By Meganathan
|

நீங்கள் வாங்க இருக்கும் ஸ்மார்ட்போனின் அத்தியாவசிய அம்சமாக பாதுகாப்பு இருக்க வேண்டுமா, அப்படியெனில் உங்களுக்கு தேவையானது எல்லாம் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன் தான்.

கைரேகை ஸ்கேனர் அம்சம் இன்றைய விலை உயர்ந்த கருவிகளில் அதிகம் வழங்கப்படுகின்றது. சீனாவின் ஹூவாய் நிறுவனம் கைரேகை ஸ்கேனர் கொண்ட கருவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய துவங்கியது என்றும் கூறலாம்.

ஹூவாய் நிறுவனத்தின் புதிய கருவியான ஹானர் 7 ஸ்மார்ட்போன் சந்தையை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஃபுல் எச்டி திரை, 64-பிட் ஆக்டா கோர் கிரின் 935 பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு சார்ந்த EMUI 3.1 மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 20 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் தில கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதோடு சிறப்பான செல்பீக்களை எடுக்க வழி செய்யும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் கருவியை அன்லாக் செய்து கொள்ள முடியும்.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஸ்மார்ட்போன்களின் மிகவும் அத்தியாவசிய அம்சமாக இருப்பது கைரேகை ஸ்கேனர் தான். கேமராவின் கீழ் பொருத்தப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனர் உங்களது தகவல்களை பாதுகாக்கவும், கருவியை அன்லாக் செய்யவும் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பயனர்களின் தகவல்களுக்கு பாதுாப்பு வழங்கிட பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படுகின்றது. நான்கு இலக்கு பாஸ்வேர்டினை ஹேக் செய்வது மிகவும் எளிமையான காரியமே, ஆனால் பயோ-மெட்ரிக் முறையை பின்பற்றும் கைரேகை ஸ்கேனர்களை யாரும் ஏமாற்ற முடியாது என்பதால், இதில் பாதுகாப்பு சற்று அதிகமே.

எளிமை

எளிமை

ஹானர் 7 கருவியில் கைரேகை ஸ்கேனர் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் படி பொருத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி கைரேகை ஸ்கேனரை பயன்படுத்த முடியும்.

வேகம்

வேகம்

ஹானர் 7 கருவியில் வழங்கப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனர் வேகம் சீராகவே இருக்கின்றது. அதிக துல்லியமாக இருப்பதால் இந்த ஸ்கேனரை யாரும் ஏமாற்ற முடியாது. மேலும் விரல் ஈரமாக இருந்தாலும் சரியாக வேலை செய்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

பயன்

பயன்

மற்ற கைரேகை ஸ்கேனர்கள் போனினை அன்லாக் செய்ய மட்டுமே பயன்படும் நிலையில் ஹானர் 7 கருவியில் ஸ்கேனரின் மேல் பக்கமாக ஸ்லைடு செய்தால் நோட்டிபிகேஷன் பேனல் இயக்க முடியும், இதே போல் சென்சாரை கீழ் பக்கமாக ஸ்லைடு செய்தால் நோட்டிபிகேஷன் பேனலை க்ளோஸ் செய்ய முடியும்.

ஸ்கேனர் பயன்கள்

ஸ்கேனர் பயன்கள்

இதே போல் ஸகேனரில் மேல் பக்கமாக ஸ்வைப் செய்தால் சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளின் திரை ஓபன் ஆகும், மேலும் ஒரு முறை டேப் செய்தால் பேக் பட்டன் போன்றும் கைரேகை ஸ்கேனரை பயன்படுத்த முடியும்.

மென்பொருள்

மென்பொருள்

மென்பொருளில் செயல்படுத்தப்பட்டிருக்கும் இது போன்ற ஜெஸ்ட்யூர்கள் கைரேகை ஸ்கேனர் பயனர்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கின்றது.

 ஃபோல்டர்

ஃபோல்டர்

இதே போன்று ஹானர் 7 கருவியில் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சமானது குறிப்பிட்ட ஃபோல்டரை கைரேகை ஸ்கேனர் அல்லது பாஸ்வேர்டு கொண்டு மட்டுமே பயன்படுத்த வழி செய்கின்றது.

Best Mobiles in India

English summary
Honor 7 Comes With Multi-Functional Fingerprint Scanner. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X