நேருக்கு நேர் : ஹானர் 6எக்ஸ் VS ரெட்மீ நோட் 4 - வெற்றி எதற்கு.?

Written By:

ஸ்மார்ட்போன் உலகில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறிவிட்டது என்று ஒன்றை குறிப்பிட்டு கூறினால் - அது கேமரா செயல்திறனாகத்தான் இருக்கும். 2014-ஆம் ஆண்டு வெளியான எந்தவொரு இடைப்பட்ட அல்லது தலைமை ஸ்மார்ட்போனை எடுத்து இந்தாண்டின் கருவியோடு ஒப்பிட்டால் அதன் கேமரா செயல்திறன் நிறைய முன்னேற்றங்களை அடைந்திருக்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

அப்படியான திறமையான கேமரா செயல்திறனை வழங்க பல பட்ஜெட் கருவிகள் இருப்பினும் சில பட்ஜெட் கருவிகள் அதன் புகைப்படத்துறையில் வேறு எல்லைகளை தொடும் அளவிலான திறனை கொண்டுளள்ன. அப்படியான கருவிகளில் பட்ஜெட் விலைப்புள்ளி கொண்ட ஹை-எண்ட் கேமரா ஸ்மார்ட்போன் ஆன ஹானர் 6எக்ஸ் மற்றும் சியோமி ரெட்மீ நோட் 4 - ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க கருவிகளாகும். இந்த இரண்டு கருவிகளையும் நேருக்கு நேர் மோதவிட்டு பார்த்தல் வெற்றி எதற்கு கிடைக்கும்.? - வாங்க ஒரு கை பார்த்துடலாம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹானர் 6எக்ஸ்

ஹானர் 6எக்ஸ்

ஹானர் 6எக்ஸ் ஒரு இரட்டை லென்ஸ் கேமரா தொகுதி கொண்டுள்ளது - ஒரு 2எம்பி இரண்டாம் நிலை கேமரா ஜோடியாக ஒரு 12எம்பி முதன்மை சென்சார் கொண்டிருக்கிறது. முதன்மை கேமராவில் குறைந்த ஒளி நிலைமைகள், எப்/0.95 மற்றும் செயல்திறன் மிக்க 1.25 யூஎம் பெரிய பிக்சல் அளவிலான ஒரு பெரிய துளை உள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார்

சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார்

இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தமட்டில் பொக்கே விளைவுகளை உருவாக்கும் மற்றும் ஆழமான தகவலை கைப்பற்ற உதவும் மற்றும் நீங்கள் ஒரு படத்தை கிளிக் செய்த பின்னர் கூட அதில் மாற்றங்கள் நிகழ்த்த அனுமதிக்கும் உடன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் 0.3 விநாடிகள் க்விக் போகஸ் நேரம் உடைய ஒரு சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார் கொண்டுள்ளது.

சியோமி ரெட்மீ நோட் 4

சியோமி ரெட்மீ நோட் 4

மறுபக்கம் சியோமி ரெட்மீ நோட் 4 ஆனது சாம்சங் ஐஎஸ்ஓசெல் (ISOCELL) போட்டோ சென்சார் பயன்படுத்தும் ஒரு 13 வேம்பு முதன்மை கேமரா கொண்டுளளது ரெட்மீ நோட் 3 கருவிக்கும் இதற்கும் உள்ள பெரிய மாற்றம் இதுமட்டும் தான். சியோமி ரெட்மீ நோட் 4 கேமரா ஒரு எப் / 2.0 துளை பயன்படுத்துகிறது மேலும் வண்ண விலகல் குறைக்க ஒரு நீல கண்ணாடி வடிகட்டியும் கொண்டுள்ளது.

இரட்டை லென்ஸ்.? மோனோ லென்ஸ்.?

இரட்டை லென்ஸ்.? மோனோ லென்ஸ்.?

ஹானர் 6எக்ஸ் கருவியின் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பானது சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் மோனோ லென்ஸ் கேமரா அமைப்புடன் ஒப்பிடுகையில் சிறந்தது ஏனென்றால், பட்ஜெட் விலை புள்ளியில் டூவல் கேம் தொழில்நுட்ப பயன்படுத்தும் வாய்ப்பை 6எக்ஸ் வழங்குகிறது மற்றும் ஹானர் 6எக்ஸ் கருவியின் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு குறைந்த ஒளியில் நல்ல புகைப்படம் எடுக்க உதவும், மற்றும் சிறிய பொருள்கள் மீதும் ஆழமான தகவல் பெற உதவும். இதெல்லாம் பிற பாரம்பரிய மோனோ லென்ஸ் கேமிராக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளது ஆக ஒப்பிடும் போது டூவல் கேமரா அமைப்பு சிறப்பானதே ஆகும்.

மேம்படுத்தப்பட்ட குறைந்த ஒளி செயல்திறன்

மேம்படுத்தப்பட்ட குறைந்த ஒளி செயல்திறன்

மோனோ லென்ஸ் கேமராவுடன் ஒப்பிடுகையில் குறைந்த ஒளி நிலைமைகளில் சிறந்த ஒட்டுமொத்த படத்தை தர ஒரு இரட்டை லென்ஸ் அமைப்பால் முடியும். ஏனெனில் இரண்டு லென்ஸ் வன்பொருள் ஆனது அதிக ஒளி அளவை உறிஞ்சு பிரகாசமான படங்களை தர வல்லது. அப்படியாக, ஹானர் 6எக்ஸ் அக்கருவியின் 12எம்பி + 2எம்பி இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு எந்த விவரங்களை இழக்காமல் அருமையான படங்களை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

அற்புதமான பொக்கே விளைவு

அற்புதமான பொக்கே விளைவு

ஹானர் 6எக்ஸ் ஆனது விரும்பிய அளவிலான பொக்கே விளைவுகளை அற்புதமான முறையில் ஏற்படுத்திக்கொள்ள உதவும். மற்றும் இதன் புத்திசாலித்தனமான கேமரா மென்பொருள் உதவியுடன் பின்னணி மங்கலான முறையிலும் மற்றும் முக்கியமான பொருள் அதிக கவனத்துடன் கைப்பற்றும்.

வேகமான போகஸ்

வேகமான போகஸ்

மோனோ-லென்ஸ் கேமராவோடு ஒப்பிடும்போது இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு மற்றொரு நன்மை கொண்டுள்ளது அது போகஸ் வேகம். ஒரு இரட்டை கேமரா வன்பொருள் உடன், ஸ்மார்ட்போன் கேமராக்கள் மிகவும் விரிவான மற்றும் வேகமான படங்களை வழங்கும். அப்படியாக 6எக்ஸ் 0.3 விநாடிகள் என்ற மிக வேகமான போகஸ் வேகம் கொண்டுள்ளது. இது நிஜமாகவே ஒரு தீவிரமான வேகமாகும்.

ரெட்மீ நோட் 4 ஒளி நிலைமைகள்

ரெட்மீ நோட் 4 ஒளி நிலைமைகள்

ரெட்மீ நோட் 4 கொண்டு கைப்பற்றப்பட்ட படங்கள் மிகவும் ரிச் ஆக கண்களுக்கு இயற்கை வண்ணங்கள் நிரம்ப தெரிந்தாலும் கூட சில சமயம் அது செயற்கையான ஒன்றாகவே தெரிகிறது. ஒருமுறை பிற கேமராக்களின் புகைப்படங்களை பார்த்தல் உங்களுக்கே புரிய வரும்.

யதார்த்தமான நிறம்

யதார்த்தமான நிறம்

மாறாக ஹானர் 6எக்ஸ் ஆனது நீங்கள் கைப்பற்றும் இயற்கை காட்சிகளில் எந்த நிறத்தை வேறுபாடுகளை திணிக்காமல் யதார்த்தமான நிறத்தைக் கொண்டு படங்களை தயாரிக்கும். வெறுமனே ஹானர் 6எக்ஸ் இரட்டை லென்ஸ் கேமரா கொண்டு உங்கள் கண்களால் காக்கும் அதே நிறத்தை புகைப்படத்தில் கொண்டுவரலாம்.

வெற்றி எதற்கு.?

வெற்றி எதற்கு.?

ரெட்மீ கருவியில் செயற்கை பின்னணி தெளிவின்மை மென்பொருள் வழிமுறைஅதாவது பொக்கே விளைவு உள்ளது இருப்பினும் அர்ப்பணிப்பான வன்பொருள் இல்லாததால், முடிவுகள் திருப்திகரமாக இல்லை. ஆகமொத்தம், ரெட்மீ நோட் 4 கருவியின் மோனோ லென்ஸ் கேமராவை விட ஹானர் 6எக்ஸ் என்ற பட்ஜெட் விலைப்புள்ளி கொண்ட கருவியின் கேமரா சிறப்பானது என்ற முடிவுக்கு நாம் வரலாம். சிறப்பன விவரிக்கும் படங்கள் மற்றும் குறைக்கப்பட்ட இரைச்சல் அளவுகள், யதார்த்தமான வண்ணம் மற்றும் உண்மையான புகைப்பட முடிவுகளை பார்க்க விரும்புவர் நீங்கள் என்னால் உங்களுக்கு சரியான தேர்வு - ஹானர் 6எக்ஸ் தான்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாவ்வ்.. செல்பீயும் சூப்பர்.. ரியர் கேமராவும் சூப்பர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Honor 6X Vs Xiaomi Redmi Note 4: Best photography camera phone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot