Home
Mobile

ஜனவரி 24-ஆம் தேதி இந்தியாவில் களம் காணும் ஹானர் 6எக்ஸ் (அம்சங்கள்).!

ஹானர் 6எக்ஸ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.

By Muthuraj

ஹுவாய் நிறுவனத்தின் பிராண்ட் ஆன ஹானர் கருவியின் சமீபத்திய இரட்டை கேமிரா ஸ்மார்ட்போன் தான் - ஹானர் 6எக்ஸ்.இக்கருவி இந்தியாவில் வரும் ஜனவரி 24-ஆம் தேதியன்று அறிமுகமாகவுள்ளது. ஹானர் நிறுவனம் இந்த இரட்டை கேமரா ஸ்மார்ட்போனின் வெளியீட்டு அழைப்பிதழை இந்த கருவியின் பெயரை குறிப்பிடாமலேயே வழங்கியுள்ளது.

இந்த ஹானர் 6எக்ஸ் கருவி என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது இக்கருவியின் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும் என்பதை பற்றிய விவரமான தொகுப்பே இது.

மூன்று வகை

மூன்று வகை

ஹானர் 6எக்ஸ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இக்கருவி சீனாவில் மூன்று வகைகளில் (3ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 4ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு) தொடங்கப்பட்டது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த மூன்று வகைகளும் முறையே இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 9,900/-, சுமார் ரூ.12,900/- மற்றும் சுமார் ரூ.15,800/- என்ற விலைக்கு விற்கப்பட்டன. ஆனால் இந்த விலை நிர்ணயம் இந்தியாவிலும் நிகழும் என்பது நிச்சயமற்றது தான்.

வண்ண வேறுபாடு

வண்ண வேறுபாடு

தங்கம், வெள்ளி, சாம்பல், நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண வேறுபாடுகளில் கிடைக்கும் ஹானர் 6எக்ஸ் கருவிகளின் எந்தெந்த வண்ண வேறுபாடுகள் இந்தியாவில் கிடைக்கும் என்பதில் தெளிவில்லை.

டிஸ்ப்ளே, மேம்பாடுகள்

டிஸ்ப்ளே, மேம்பாடுகள்

இக்கருவி 5.5 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் ஹானர் 5எக்ஸ் பல மேம்பாடுகள் கொண்டுள்ளது; ஒரு கிரின் 655 அக்டாகோர் எஸ்ஓசி, இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி அட்டைகளுக்கான (128ஜிபி) ஆதரவு கொண்ட ஹைப்ரிட் டூவல் சிம் (நானோ சிம்) ஸ்லாட்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையில் இயங்கும் இஎம்யூஐ (EMUI) 4.1 இயங்குதளம், பிடிஏஎப் மற்றும் ஒரு கூடுதல் 2-மெகாபிக்சல் சென்சார் ஆதரவு கொண்ட ஒரு 12-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு, மற்றும் செல்பீகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள் :

பிற அம்சங்கள் :

- 0.3 வினாடிகளில் ஸ்மார்ட்போனை திறக்கும் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்
- ப்ளூடூத் 4.1
- வைஃபை 802.11 பி/ஜி/என்
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- 3340எம்ஏஎச் பேட்டரி திறன்
- 150.9x72.6x8.2எம்எம் அளவு
- 62 கிராம் எடை

மேலும் படிக்க

மேலும் படிக்க

லாவா ஏ50, ஏ55 : ஏற்புடைய அம்சங்கள் கொண்ட பட்ஜெட் கருவிகள்.!

Best Mobiles in India

English summary
Honor 6X Set to Launch in India on January 24. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X