ஹானர் 6எக்ஸ் - இதுதான் நிஜமான அசத்தல் அம்சங்கள் கொண்ட ஆண்ட்ராய்டு.!

ஹானர் 6எக்ஸ் கருவியின் விலை மற்றும் இக்கருவி கொண்டுள்ள தனிப்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன.?

|

சமீப காலங்களாக பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்கள் நுழைந்த வண்ணம் உள்ளன. எல்லாமே பட்ஜெட்டின் கீழ் வருவதால் எந்த பிராண்ட் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உங்களுள் எழுவது சகஜம் தான்.!

ஹானர் 6எக்ஸ் கருவியை உங்களுக்கு பரிந்துரைத்து உங்களின் குழப்பத்தை தீர்த்து வைப்பதோடு ஹானர் 6எக்ஸ் கருவியின் விலை மற்றும் இக்கருவி கொண்டுள்ள தனிப்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதையும் உங்களுக்கு வழங்குகின்றோம். அவைகளையெல்லாம் தெரிந்துகொண்ட பின்னர், வாங்கினா இப்படி ஒரு ஸ்மார்ட்போனைத்தான் வாங்கனும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுவதும் சகஜமே.!

யூனிபாடி மெட்டா ப்ரோஸ்டட்

யூனிபாடி மெட்டா ப்ரோஸ்டட்

இந்த ஸ்மார்ட்போன் ஆனது உண்மையில் ஒரு பட்ஜெட் விலையிலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதில் எந்த விதமான மறுபரிசீலனையும் வேண்டாம். அதற்கு இக்கருவியின் யூனிபாடி மெட்டா ப்ரோஸ்டட் வடிவமைப்பே (Uni-body Meta Frosted Design) முதல் சாட்சி.

ஒரு கையால்

ஒரு கையால்

இக்கருவியின் வடிவமைப்பு குழுவானது இக்கருவியின் அழகியலை மிகவும் கவனித்து செயல்படுத்தியுள்ளது. ஹானர் 6எக்ஸ் வெறும் 8.2மிமீ மற்றும் வட்ட முனைகள் கொண்ட சற்றே வளைந்த உலோக வடிவமைப்பு மட்டுமல்ல மூலைகள் மற்றும் ஓரங்களில் நீங்கள் கூட ஒரு கையால் கூட செயல்படுத்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 6எக்ஸ் கருவியானது நீங்கள் படம் பார்கா மற்றும் கேம்ஸ் விளையாட ஏதுவாக 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி (பிக்சல் பர் இன்ச்) கொண்ட, 1080 x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

2.5டி வளைந்த கண்ணாடி

2.5டி வளைந்த கண்ணாடி

இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு சிறப்பம்சமாக முழு எச்டி உடனான 2.5டி வளைந்த கண்ணாடி அமைப்பு திகழ்கிறது. இது திரையில் ஒட்டுமொத்த மல்டிமீடியா பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும். உடன் ஹானர் 6எக்ஸ் கருவியானது 2.1ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.7ஜிகாஹெர்ட்ஸ் உடனான நிறுவனத்தின் ஹூவாய் க்ரீன் 655 சிப் கொண்டு இயங்கும்.

சேமிப்பு

சேமிப்பு

ஸ்மார்ட்போனின் சேமிப்பு திறனை பொறுத்தமட்டில் 3ஜிபி ரென் உடனான 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் உடனான 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு என்ற இரண்டு மாறுபாடுகளை வழங்குகிறது. மற்றும் இரண்டு வகைகளிலுமே மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரையிலாக நீட்டிப்பு வசதியும் உள்ளது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

ஹானர் 6எக்ஸ் கருவியின் உச்ச வடிவமைப்பானது 0.3 வினாடிகளில் கைபேசியை திறக்கும் ஒருங்கிணைந்த ஒரு மூன்றாம் தலைமுறை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. உங்கள் ஆள்காட்டி விரலை வைக்க அதை படங்களை கிளிக் செய்யுமாறு ஷட்டர் பொத்தானாகவும் வேலை.செய்யும்.

முதன்மை கேமரா

முதன்மை கேமரா

ஹானர் 6எக்ஸ் கருவியில் கேமரா ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும் இக்கருவி ஒரு 12எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு 2எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது அதாவது ஒரு இரட்டை பின்புற கேமரா கொண்டு வருகிறது. இக்கருவியின் எப் / 2.2 என ஒரு பரந்த துளை நீளம் மூலம் 1080 தர வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

உடன் ஹானர் 6எக்ஸ் ஒரு மதிப்பான செல்பீ கேமராவும் கொண்டுள்ளது அதாவது 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. உடன் இது அதிக தீர்மானம் மற்றும் அதிக தொனியிலான நிறங்கள் கொண்ட படங்களை கைப்பற்ற உங்களுக்கு உதவும்.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

ஹூவாய் ஹானர் 6எக்ஸ் கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி, எல்டிஇ ஆதரவு மற்றும் ஜி.பி.எஸ் ஆதரவும் வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Honor 6X is a true example of premium craftsmanship. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X