வாங்க வேண்டாம் - வெறும் ரூ.7,199/-க்கு ஹானர் 6எக்ஸ் - ஏன்.?

|

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், கடந்த சில மாதங்களாகவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சியோமி நிறுவனத்தின் மிகப்பெரிய போட்டியாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் பணியாற்றி வரும் ஹானர் நிறுவனமானது ஹானர் 7எக்ஸ் என்கிற மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை தொடர்ந்து, அதன் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையை நம்பமுடியாத வண்ணம் குறைத்துள்ளது.

வாங்க வேண்டாம் - வெறும் ரூ.7,199/-க்கு ஹானர் 6எக்ஸ் - ஏன்.?

கடந்த 2017-ஆம் ஆண்டில் அறிமுகமான ஹானர் 6எக்ஸ் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் நிறுவனத்தின் 'தி கிரேட் இண்டியன் சேல்' விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.7,199 (32 ஜிபிஜி பதிப்பு) என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதை விட மலிவான விலைக்குறைப்பை ஹானர் 6எக்ஸ் சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன்.?

ஏன்.?

ஆனால் இங்கு எழும் பிரதான கேள்வி என்னவென்றால்: அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள ஹானர் 7எக்ஸ் வாங்க கிடைக்கும் நிலைப்பாட்டில் ஹானர் 6எக்ஸ்-ஐ வாங்கலாமா.? எங்களை பொறுத்தவரை நீங்கள் ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டும். ஏன் என்பதை விளக்கமாக காண்போம்.

10% தள்ளுபடி

10% தள்ளுபடி

ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மாதிரியின் விலையானது ரூ.7,999 ஆகும் மற்றும் அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.9,999/- ஆகும். இருப்பினும், அமேசான் இந்தியாவின் எச்டிஎப்சி டெபிட் / கிரெடிட் பயனாளிகளுக்கு 10% தள்ளுபடி கிடைப்பதால் ஹானர் 6எக்ஸ்-ன் 3 ஜிபி மாறுபாட்டை ரூ.7,199/-க்கும் மற்றும் 4 ஜிபி மாறுபாட்டை ரூ.8,999/-க்கும் வாங்கலாம்.

பெருமை

பெருமை

ஹானர் 6எக்ஸ், கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. மலிவான விலையில் கிடைக்கும் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்ந்த இன்றைய நிலைப்பாட்டில் அந்த பெருமையை கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். ஹானர் 6எக்ஸ் டூயல் கேமரா தொழில்நுட்பத்தை இடைப்பட்ட விலை விலைக்கு கொண்டு வந்தது உண்மைத்திகான் ஆனால் அது 2017-ஆம் ஆண்டில் தான் தவிர. இந்த 2018-ல் அல்ல.

பிரச்சனை

பிரச்சனை

ஹானர் 6எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோவுடன் துவங்கியது, ஆனால் பின்னர், ஒரு நல்ல இடைப்பட்ட ஸ்மார்ட்போன் பிரிவில் இணையும் நோக்கத்தின் கீழ் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மேம்பாட்டை பெற்றது. நௌவ்கட் மேம்பாட்டிற்கு பிறகு ரேண்டம் ரீபூட், நீண்ட நேரம் பிரீஸிங் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளானது இங்கு குறிப்பிடத்தக்கது.

அலுமினிய உடல்

அலுமினிய உடல்

வன்பொருட்களை பொறுத்தமட்டில், ஹானர் 6 எக்ஸ் ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே, ஹைசிலிகான் கிரின் 655 எஸ்ஓசி, அலுமினிய உடல், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான 2எம்பி ங்டெப்த் சென்சார் என்கிற டூயல் பின்புற கேமரா அமைப்பு, 8எம்பி செல்பீ கேமரா, பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இரண்டு பரிந்துரை

இரண்டு பரிந்துரை

சரி ஹானர் 6எக்ஸ்-ஐ புறக்கணித்து விட்டு, அதே விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை தேடத்தொடங்கும் முன்னர் எங்களின் இரண்டு பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவும். ஒன்று - மியூஐ9 கொண்டுள்ள எந்தவொரு சியோமி ஸ்மார்ட்போனையும் வாங்கலாம் அல்லது ரூ.9,999/-க்கு கிடைக்கும் டெனோர் ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Honor 6X is Available at an All-Time Low Price of Rs 7,199, But Should You Purchase it in 2018? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X