ஹானர் 6எக்ஸ் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

Written By:

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஹானர் அதன் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஹானர் 6எக்ஸ் கருவிக்கு இந்தியாவில் விலை குறைப்பை அறிவித்துள்ளது.

ஹானர் 6எக்ஸ் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மாறுபாடு ரூ.12,999/- ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் மாறுபாடு ரூ.15,999/- ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது அமேசானில் இன்று (ஜூன் 6) முதல் இக்கருவிக்கு புதிய விலை டேக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்கள் இ-காமர்ஸ் தளங்களில் இப்போது ரூ.11,999/-க்கு 32 ஜிபி மறுபாட்டையும், ரூ.13,999/-க்கு 64ஜிபி மாறுபாட்டையும் வாங்க முடியும். நினைவுகூர வேண்டுமெனில் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது மற்றும் சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.

இந்த சாதனம் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் சென்சார் என்ற கலவையை கொண்டுள்ளது. பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF), எல்டிப்ளாஷ் முதலிய கேமரா அம்சங்களையும் கொண்டு வருகிறது. முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் 8 மெகாப்செல் சென்சார் உள்ளது. இதன் கேமரா ஆழமான புகைப்படங்களை பதிவு செய்ய உதவுகிறது, மேலும் ஒரு படத்தை தொடுவதின் மூலமாகவும் அதன் போக்கஸை மாற்றி அமைக்கலாம்.

ஹானர் 6எக்ஸ் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

மற்ற குறிப்புகளை பொறுத்தவரை, ஹானர் 6எக்ஸ் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான இஎம்யூஐ வி4.1 கொண்டு இயங்குகிறது. தவிர, இது 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.5 அங்குல (1080x1920 பிக்சல்கள்) முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலும் உள்ளே இந்த சாதனம் 3ஜிபி ரேம் + 32ஜிபி உள் சேமிப்பு அல்லது 4ஜிபி ரேம் + 64ஜிபி உள்ளக சேமிப்பகங்களுடன் இணைக்கப்பட்ட மாலி- டி830எம்பி2 ஜிபியூ உடனான க்ரீன் 655 ஆக்டா-கோர் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு கருவிகளிலும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக உள் சேமிப்பு நீட்டிப்பு ஆதரவும் உள்ளது. 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், எ-ஜிபிஎஸ், திசைகாட்டி ஆகிய இணைப்பு மற்றும் சென்சார் ஆதரவுகளை வழங்குகிறது.

English summary
Honor 6X gets a price cut. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot