பட்ஜெட் விலையில் 5-இன்ச், 3020எம்ஏஎச் கொண்ட ஹானர் 6சி.!
ஹானர் 8 ப்ரோவுடன் ஒப்பிடும் போது இடைப்பட்ட பிரிவில் சிறப்பான ஒரு கருவியாக இது திகழும்.!
ஹானர் 8 புரோ கருவியுடன் இணைந்து ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மலிவு விலை சாதனமாக சந்தையில் இறக்கப்பட்டவுள்ள இக்கருவி இம்மாத இறுதிக்குள் கைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரே, வெள்ளி, மற்றும் தங்கம் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன.? என்னென்ன சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது என்று பார்த்தல் இந்தஸ்மார்ட்போனின் கேமராகு அடியில் ஒரு பின்புற கைரேகை சென்சார் கொண்டுள்ளது மற்றும் ஒரு உலோகம் போன்ற பின்புறம் கொண்டுள்ளது.!

இடைப்பட்ட பிரிவில்
உடலில் ஹோம் பொத்தான் கொண்டுள்ள இக்கருவி ஹானர் 8 ப்ரோவுடன் ஒப்பிடும் போது இடைப்பட்ட பிரிவில் சிறப்பான ஒரு கருவியாக திகழும் என்பதில் சந்தேகமேயில்லை.

டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான ஹூவாய் இஎம்யூஐ 4.1 கொண்டு இயங்கும் இக்கருவி இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஒரு 5 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மெமரி
ஒரு 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 செயலி உடனான 3ஜிபி ரேம் மூலம் இயக்கப்படும் இக்கருவி ஒரு மைக்ரோ அட்டை உதவியுடன் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவையும் 32ஜிபி உள்ளடக்க சேமிப்பையும் வழங்குகிறது.

கேமரா
கேமரா துறையை பொறுத்தவரை, ஹானர் 6சி எப்/2.2 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் வீடியோ அரட்டை நோக்கங்களுக்கான எப்/ 2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

விலை
ரூ.15,900/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி ஒரு 3020எம்ஏஎச் பேட்டரி பேக் கொண்ட இக்கருவி அளவீட்டில் 138 கிராம் எடையுடையது. உடன் 4ஜி, எல்டிஇ, ப்ளூடூத், மற்றும் வைஃபை ஆகிய இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க
ரூ.2,999 விலையில் மைக்ரோமேக்ஸ்-இன் பாரத் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.!


Click it and Unblock the Notifications