ஹானர் அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. IP69K ரேட்டிங்.. 8100mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் 600எஸ் 5ஜி (Honor 600S 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 8100எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா மற்றும் தரமான சிப்செட் உடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஹானர் போனின் விலை மற்றும் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் 600எஸ் 5ஜி அம்சங்கள் (Honor 600S 5G Specifications): 6.87-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உடன் ஹானர் 600எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1592×720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1020 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய ஹானர் போனில் உள்ளன.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் (Snapdragon 4 Gen 4 chipset) உடன் ஹானர் 600எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
MagicOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ஹானர் 600எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் 600எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)கொண்டுள்ளது ஹானர் 600எஸ் 5ஜி மாடல். அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவும் இந்த போனில் உள்ளது. ஆகவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த புதிய போனில் உள்ளன.
IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது ஹானர் 600எஸ் 5ஜி மாடல். குறிப்பாக இந்த போனின் எடை 216 கிராம் ஆகும். 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஹானர் 600எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8100எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் 600எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
தற்போது ஹானர் 600எஸ் 5ஜி போன் ஹாங்காங் மற்றும் தைவான் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஹானர் 600எஸ் 5ஜி போனின் ஆரம்ப விலை HK$1,999 (இந்திய மதிப்பில் ரூ.24,364)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications