Home
Mobile

iPhone Air-க்கு சங்கு... அதே டிசைனில் 9000mAh பேட்டரி உடன் புதிய போன்.. எந்த மாடல்?

ஹானர் (HONOR) நிறுவனம் அதன் நம்பர்-சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தெரிகிறது. இவைகள் வெறுமனே "நெக்ஸ்ட் ஜெனரேஷன்" மாடல்களாக மட்டுமின்றி.. பேட்டரி விஷயத்தில் "நெக்ஸ்ட் லெவல்" ஸ்மார்ட்போன்களாக வரும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

அப்படி என்ன மாடல்கள்? இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் ஹானர் 400 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து 2025 நவம்பரில் ஹானர் 500 சீரீஸையும் அறிமுகப்படுத்தியது. இந்த வெளியீட்டு முறையின் அடிப்படையில், அடுத்த வரப்போவது ஹானர் 600 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தான்.

iPhone Air-க்கு சங்கு... அதே டிசைனில் 9000mAh பேட்டரி உடன் புதிய போன்!

சுவாரசியமாக ஹானர் 600 சீரீஸின் கீழ் ஹானர் 600 லைட் மாடல் பல சான்றிதழ் பட்டியல்களில் தோன்றியுள்ளது, ஆக இது சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் லைட் மாடல் உலகளாவிய சந்தைகளுக்கு சென்றால், ஸ்டாண்டர்ட் ஹானர் 600 மற்றும் ஹானர் 600 ப்ரோ மாடல்களும் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம். அதிகபட்சம் சைனீஸ் வேரியண்ட்களுக்கும் க்ளோபல் வேரியண்ட்களும் - அம்சங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

ஹானர் 600 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, ஹானர் நிறுவனம் 6.57 இன்ச் டிஸ்பிளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனில் பணியாற்றி வருகிறது. மேலும் இது சுமார் 9,000mAh திறனை எட்டும் என்று குறிப்பிட்ட லீக் தெரிவிக்கிறது. இந்த போன் வரவிருக்கும் ஹானர் 600 ஆக தெரிகிறது.

இதுதவிர்த்து குறிப்பிட்ட டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட், கேமரா அல்லது சார்ஜிங் திறன்கள் போன்ற கூடுதல் வன்பொருள் விவரங்களை வெளியிடவில்லை. முன்னதாக வெளியான ஹானர் 500 மாடல் ஆனது ஐபோன் ஏர் போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது. ஆக ஹானர் 600 ஸ்மார்ட்போனில் நாம் அதேபோன்ற டிசைனை எதிர்பார்க்கலாம்

சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட மேஜிக்ஓஎஸ் 10
- 6.71-இன்ச் 1.5கே LTPO OLED டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ்)
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை ரேம் மற்றும் 1TB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிப்பிள்ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் 1/1.3-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 200 மெகாபிக்சல் 1/1.4-இன்ச் டெலிஃபோட்டோ கேமரா (எப்/2.6, 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம்)
- AIMAGE ஹானர் நோக்ஸ் எஞ்சின் மற்றும் CIPA 5.5 இமேஜ் ஸ்டெபிலைசேஷன்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3D டெப்த் சென்சார்

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், கலிலியோ, க்ளோநாஸ், பைடு, என்எப்சி, ஓடிஜி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 100W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,200mAh பேட்டரி
- அளவீட்டில் 161.15×75×8.32மிமீ மட்டும் எடையில் 219 கிராம்.
- விலை: சீனாவில் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.70,200

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 600 Tipped to Pack 9000mAh Battery and Expected to Launch Globally
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X