Home
Mobile

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 7700mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி (Honor 600 Smart 5G) ஸ்மார்ட்போனை தற்போது பிரான்சில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி அம்சங்கள் (Honor 600 Smart 5G specifications): 6.87-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1592 x 720 பிக்சல்ஸ், 1020 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 7700mAh பேட்டரி..எந்த மாடல்?

அதேபோல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 (Snapdragon 4 Gen 4) சிப்செட் உடன் ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

MagicOS 10.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வசதியுடன் ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ் அன்லாக் மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களைக் கொண்டுள்ளது புதிய ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

7700எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி போனின் ஆரம்ப விலை €219 (இந்திய மதிப்பில் ரூ.23,631)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 600 Smart 5G launched with 7700mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X