Home
Mobile

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்கள்.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 600 மற்றும் ஹானர் 600 ப்ரோ ஸ்மார்ட்போன்களை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஹானர் போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்

ஹானர் 600 அம்சங்கள் (HONOR 600 specifications): 6.57-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஹானர் 600 வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1264 x 2728 பிக்சல்ஸ், 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz high-frequency PWM dimming உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக MagicOS 10.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது.

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் ஹானர் 600 போன் வெளியாகி உள்ளது. மேலும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. யூயூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) M ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

200எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஹானர் 600. குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ எடுக்க முடியும். மேலும் 50எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளுடன் ஹானர் 600 போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, வைஃபை 802.11ஏஎக்ஸ், ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஹானர் 600 ப்ரோ அம்சங்கள் (HONOR 600 Pro specifications) : 6.57-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஹானர் 600 ப்ரோ வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1264 x 2728 பிக்சல்ஸ், 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz high-frequency PWM dimming உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக MagicOS 10.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது..

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் உடன் ஹானர் 600 ப்ரோ போன் வெளியாகி உள்ளது. மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

200எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஹானர் 600 ப்ரோ போன். குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ எடுக்க முடியும். மேலும் 50எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளுடன் ஹானர் 600 ப்ரோ போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, வைஃபை 802.11ஏஎக்ஸ், ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஹானர் 600 மற்றும் ஹானர் 600 ப்ரோ போன்களின் விலை
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் 600 போனின் விலை RM 2,599 (இந்திய மதிப்பில் ரூ.61,640)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 600 ப்ரோ போனின் விலை RM 3,099 (இந்திய மதிப்பில் ரூ.73,490)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் 600 ப்ரோ போனின் விலை RM 3,299 (இந்திய மதிப்பில் ரூ.78,235)

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 600 Pro with 6500mAh battery launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X