Home
Mobile

பெயரு தான் Lite.. ஆனா Performance எல்லாம் வெயிட்டு.. HONOR-ன் புதிய போன்.. என்ன மாடல்?

இந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் தான் "லைட்டு" (Lite) ஆனால் பெர்பார்மென்ஸ் "வெயிட்" ஆக இருக்கும் என்கிற படியாக ஒரு புதிய ஹானர் (Honor) ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. அது ஹானர் 600 லைட் (Honor 600 Lite) ஸ்மார்ட்போன் ஆகும்.

ஹானர் நிறுவனம் நேரடியாக ஒரு ஹானர் 600 சீரீஸ் (Honor 600 Series) மாடலுக்குள் குதித்துள்ளதை வைத்து பார்க்கும் போது, சீனாவில் அறிமுகமான ஹானர் 500 சீரீஸ் (Honor 500 Series) ஸ்மார்ட்போன்களின் உலகளவிய அறிமுகம் நடக்காது என்பதை மேலோட்டமாக புரிந்துகொள்ள முடிகிறது.

பெயரு தான் Lite.. ஆனா Performance எல்லாம் வெயிட்டு.. என்ன மாடல்?

ஹானர் 600 லைட் ஸ்மார்ட்போன் ஆனது சரியாக எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஹானர் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் இது பெரும்பாலும் 2026 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் பெர்பார்மென்ஸை வெளிப்படுத்தும் விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

கீக்பெஞ்ச் லிஸ்டிங்கில் LNA-NX1 என்கிற மாடல் நம்பர் உடன் ஒரு ஹானர் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது.
அது ஹானர் 600 லைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது MT6858 என பெயரிடப்பட்ட மீடியாடெக் சிப்புடன் தோன்றுகிறது. து புதிய மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் ஆக இருக்கலாம்.

பெஞ்ச்மார்க் தரகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் 8-கோர் அமைப்பை பயன்படுத்துகிறது, நான்கு கோர்கள் 2.00GHz இல் க்ளாக்ட்டு செய்யப்பட்டுள்ளன, மேலும் நான்கு கோர்கள் 2.40GHz-ஐ அடைகின்றன, மாலி-G610 MC2 கிராபிக்ஸ் யூனிட்டும் இதில் அடக்கம்.

மேலும் கீக்பெஞ்ச் பட்டியலின்படி, ஹானர் 600 லைட் ஆனது சிங்கிள் கோர் செயல்திறனில் 994 புள்ளிகளையும், மல்டி கோர் முடிவுகளில் 3,023 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளது. இந்த உள்ளீடு - 8ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐயும் குறிக்கிறது. ஆக பெரும்பாலும் இந்த ஹானர் ஸ்மார்ட்போன் ஆனது மேஜிக்ஓஎஸ் 10 உடன் அனுப்பப்படும்.

ஹானர் 400 சீரீஸ் மாடல்களை போலவே, ஹானர் 600 சீரீஸின் கீழ் ஹானர் 600 லைட் மாடல் உடன் சேர்ந்து ஸ்டாண்டர்ட் ஹானர் 60ஓ மற்றும் மற்றும் ப்ரோ வேரியண்ட்களும் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் உலகளாவிய ஹானர் 600 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வரும் மாதங்களில் வெளியிடப்பட உள்ள சைனீஸ் வேரியண்ட்களில் இருந்து சற்று வேறுபடவும் வாய்ப்புள்ளது.

ஹானர் 600 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, ஹானர் நிறுவனம் 6.57 இன்ச் டிஸ்பிளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனில் பணியாற்றி வருகிறது. மேலும் இது சுமார் 9,000mAh திறனை எட்டும் என்று குறிப்பிட்ட லீக் தெரிவிக்கிறது. இந்த போன் வரவிருக்கும் ஹானர் 600 ஆக தெரிகிறது.

இதுதவிர்த்து குறிப்பிட்ட டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட், கேமரா அல்லது சார்ஜிங் திறன்கள் போன்ற கூடுதல் வன்பொருள் விவரங்களை வெளியிடவில்லை. முன்னதாக வெளியான ஹானர் 500 மாடல் ஆனது ஐபோன் ஏர் போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது. ஆக ஹானர் 600 ஸ்மார்ட்போனில் நாம் அதேபோன்ற டிசைனை எதிர்பார்க்கலாம்

நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் ஹானர் 400 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து 2025 நவம்பரில் ஹானர் 500 சீரீஸையும் அறிமுகப்படுத்தியது. இந்த வெளியீட்டு முறையின் அடிப்படையில், அடுத்த வரப்போவது ஹானர் 600 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 600 Lite With MediaTek Dimensity 7100 SoC 8GB RAM Android 16 Launching March 2026 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X