டாப் லெவல்., சரியான விலை- 108 எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகமான ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ!

|

ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் கேமராக்கள், 60 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஹானர் 60 ப்ரோ முன் மற்றும் பின்புற கேமராக்களில் தொடர்ச்சியான 4கே வீடியோ பதிவு ஆதரவுகளை கொண்டிருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்

ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்

ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் நிறுவனம் நடத்திய நேரடி நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள் மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. ஹானர் 60 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி உடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏஐ அம்சங்களுடன் வருகிறது. இது உள்ளங்கை மற்றும் விரல் சைகைகளை பயன்படுத்தி தொலைதூரத்தில் இருந்து வ்லாக்களை கட்டுபடுத்த "கிவ் மீ ஃபைல்" பயன்முறை பயன்படுகிறது.

ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ விலை குறிப்புகள்

ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ விலை குறிப்புகள்

ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ விலை குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வேரியண்ட் உடன் இது வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பு ரூ.31,700 ஆக இருக்கும். அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய மதிப்பு ரூ.35,200 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.38,800 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

அதேபோல் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.43,500 ஆக இருக்கும் எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.47,000 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஹானர் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு சீனாவில் ஓபன் செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் பிற நாட்டு சந்தைகளில் வெளியிடுவது குறித்த எந்த தகவலும் தற்போது வரை இல்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஹானர் 60 சிறப்பம்சங்கள்

ஹானர் 60 சிறப்பம்சங்கள்

ஹானர் 60 ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது (1080x2400 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வரும் எனவும் இதில் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனஅ ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

4800 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

4800 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

இந்த ஸ்மார்ட்போன் ஏஐ அம்சங்களை உள்ளடக்கிய வ்லாக் பயன்முறையுடன் வருகிறது. இந்த நிகழ்வில் 'Give Me Five' டெமோ அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மூலம் வ்லாக்களை தொலைவில் இருந்தபடியே கை அசைவுகளில் மூலம் கட்டுப்படுத்தலாம். ஹானர் 60 ஸ்மார்ட்போனானது 4800 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் என்எஃப்சி, ப்ளூடூத் 5.2 மற்றும் வைஃபை 6 இணைப்புடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இதில் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹானர்ஸ் மேஜிக்யுஐ 5 மூலம் இயங்குகிறது.

ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் ஆதரவு

ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் ஆதரவு

ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது (1200x2652 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவுடனும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடனும் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் மூலம் இயக்கப்படுகிறது. ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் கேமரா வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 50 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

4கே அம்ச வீடியோக்களை பதிவு செய்ய முடியும்

4கே அம்ச வீடியோக்களை பதிவு செய்ய முடியும்

ஹானர் 60 ஸ்மார்ட்போனை போன்றே இந்த ஸ்மார்ட்போனும் ஏஐ இலக்காகக் கொண்ட வோல்கர்களை கொண்டிருக்கிறது. அதேமாதிரியான பயன்பாட்டில் இது இயங்குகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புற மற்றும் பின்புற கேமராக்களில் 4கே அம்ச வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போனானது 4800 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. அதேபோல் இது யூஎஸ்பி டைப்சி மூலம் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரையிலான சார்ஜிங்கை 15 நிமிடங்களில் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போனில் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது என்எஃப்சி, ப்ளூடூத் 5.2, வைஃபை 6 உடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்ட ஹானர்ஸ் மேஜிக் யுஐ 5 மூலம் இயக்கப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 60, Honor 60 pro Smartphones Launched with 108MP Camera, 12GB RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X