வெளியான விவரக்குறிப்புகள்: ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள், விலை என்ன?

|

சீனாவில் ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் டிசம்பர் 1 ஆம் தேதி நாளை நடைபெறுகிறது. ஹானர் 60 விவரக்குறிப்புகள் அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு முன்னதாகவே வெளிவந்திருக்கின்றன. புதிய ஹானர் ஃபோன் ஆனது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. இது மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் ஹானர் 60 லைவ் ஸ்மார்ட்போன் படங்கள் ஆன்லைனில் வெளிவந்திருக்கின்றன.

ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ

ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ

ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹானர் 60 ப்ரோ வழக்கமான மாடலை விட தனித்துவமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இந்த சாதனம் மேல் மற்றும் கீழ் வளைந்த விளிம்புகளை கொண்டிருக்கிறது. டிப்ஸ்டர் இஷான் அகர்வாலுடன் இணைந்து உருவாக்கப்பட்ட விவரக்குறிப்புகளை 91 மொபைல்ஸ் பகிர்ந்திருக்கிறது.

ஹானர் 60 விவரக்குறிப்புகள்

ஹானர் 60 விவரக்குறிப்புகள்

ஹானர் 60 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், ஹானர் 60 ஸ்மார்ட்போனானது 395 பிபிஐ பிக்சல் அடர்த்தியுடன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி வசதியோடு வருகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஹானர் 60 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஹானர் 60 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிக் யுஐ 5.0-ஐ ஹானர் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த சாதனமானது ப்ளூடூத் வி5.2 இணைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4800 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹானர் 60 ஸ்மார்ட்போனானது 179 கிராம் எடையுடன் வருகிறது. இது பிரைட் பிளாக், ஜேட் க்ரீன் மற்றும் ஸ்டாரி ஸ்கை ப்ளூ ஆகிய மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களை கொண்டுள்ளது.

12 ஜிபி வரையிலான ரேம்

12 ஜிபி வரையிலான ரேம்

ஹானர் 60 ஸ்மார்ட்போனானது முக்கிய தளமான கீக்பெஞ்ச் தளத்தில் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் பல்வேறு விவரக்குறிப்புகளுடன் வருகிறது. வெய்போவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் சீன பிராண்டால் டீஸ் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ நேரடி புகைப்படங்களை வெய்போவில் டிப்ஸ்டர் தளம் பகிர்ந்துள்ளது. இரண்டு புதிய ஹானர் ஸ்மார்ட்போன்களும் டிரிபிள் ரியர் கேமராக்களுடன் வருகிறது. முன்பக்கத்தில் ஹோல் பஞ்ச் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹானர் 60 ப்ரோ ஸ்மார்ட்போனானது வளைந்த விளிம்பு காட்சிகளுடன் வருகிறது. ஹானர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 1 சீனாவில் ஹானர் 60 மற்றும் ஹானர் 60 ப்ரோ சாதனத்தை வெளியிட இருக்கிறது.

புதிய ஹானர் எக்ஸ்30 மேக்ஸ்

புதிய ஹானர் எக்ஸ்30 மேக்ஸ்

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 2,399 (இந்திய மதிப்பில் ரூ.28,100) ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.31,600) ஆகஉள்ளது. நீலம், மேஜிக் நைட் பிளாக் மற்றும் டைட்டானியம் சில்வர் போன்ற நிறங்களில் இந்த சாதனம அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7.09-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

7.09-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 7.09-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாகும். அதேபோல் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 60 and Honor 60 Pro Smartphone Specs Leaked Before Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X