Home
Mobile

ஹானர் 5சி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ5 : இதெல்லாம் தெரியுமா.??

By Meganathan

ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் பிரான்டு ஹானர் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானதில் இருந்து இண்ட்நெட் விரும்பிகளுக்குப் பயனுள்ள கருவிகளை வழங்கி வருகின்றது. தனது புதிய கருவிகளைக் கொண்டு சந்தையை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் ஹானர் நிறுவனம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

புதிய கருவிகளின் வரிசையில் ஹானர் பெயரில் அறிமுகமாகியிருக்கும் கருவி தான் ஹானர் 5சி. புதிய அம்சங்கள் நிறைந்த ஹானர் கருவி இந்தியாவில் ரூ.10,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. மற்ற கருவிகளில் காணப்படும் அம்சங்களையும் ஹானர் 5சி கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ5 2016 கருவியுடன் ஹானர் 5சி கருவியை ஒப்பிட்டிருக்கின்றோம். இந்தக் கருவியானது ஹானர் கருவியை விட இரு மடங்கு அதிக விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஹானர் 5சி கருவியில் ஏர்கிராஃரப்ட்-கிரேடு அலுமினியம்-அல்லாய் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவி அழகாகக் காட்சியளிப்பதோடு மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் உறுதியாகவும் இருக்கின்றது. சாம்சங் கேலக்ஸி ஏ5 கருவியிலும் மெட்டல் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு இருக்கின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 5சி 5.2 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ5 கருவியிலும் இதே அளவு டிஸ்ப்ளே மற்றும் ரெசல்யூஷன் வழங்கப்பட்டிருந்தாலும், கருவியின் விலை அதிகம்.

வன்பொருள்

வன்பொருள்

ஹானர் 5சி கருவியின் முக்கிய அம்சங்களில் ஒன்று கிரின் 650 SoC, ஆக்டா கோர் சிபியு மற்றும் 16nm பிராசஸிங் வேகம் ஆகும். கேலக்ஸி ஏ5 கருவியில் எக்சைனோஸ் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டுள்ளது. கிரின் 650 சிப்செட் 65% வேகமாக இயங்குவதோடு 40% மின்சாரத்தைச் சேமிக்கும் திறன் கொண்டுள்ளது.

மெமரி

மெமரி

ஹானர் 5சி கருவியானது 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் சிப்செட் மற்றும் மெமரி இணைந்து கருவியினைத் தொந்தரவு இல்லாமல் சீராக இயக்க வழி செய்யும். சாம்சங் கருவியிலும் இதே மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

ஹானர் 5சி கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ5 கருவியில் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஹானர் 5சி கருவியில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளதோடு இதன் வேகம் தான் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு கருவியை ஒரே கையில் பயன்படுத்தும் வசதியை வழங்குகின்றது. கேலக்ஸி ஏ5 கருவியிலும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஹானர் 5சி கருவியில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் ஹானர் EMUI 4.1 வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ5 கருவி பழைய ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.

பேட்டரி

பேட்டரி

ஹானர் 5சி கருவியானது 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் கிரின் 650 சிப்செட் பேட்டரியை குறைவாகப் பயன்படுத்துவதால் வழக்கத்தை விட அதிகமான பேட்டரி பேக்கப் கிடைக்கும். கேலக்ஸி ஏ5 கருவியானது 2900 எம்ஏஎச் கழற்ற முடியாத பேட்டரி கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ஹானர் 5சி கருவியில் டூயல் சிம் ஸ்லாட் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், வை-பை, GPS/AGPS, மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இதோடு யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி கருவியில் இது வழங்கப்படவில்லை.

பயன்பாடு

பயன்பாடு

ஹானர் 5சி கையில் கச்சிதமாகப் பொருந்துவதோடு இதன் எடையும் குறைவாக இருப்பதால் பயன்பாடு எளிமையாக இருக்கின்றது. ஹான்ர 5சி எடை 156 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Honor 5C vs Samsung Galaxy A5: 10 Things You Need to Know Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X