Home
Mobile

இனி ஆப்பிள் இல்ல.. சாம்சங் இல்ல.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. சும்மா வேற மாறி மாடலாக இருக்க போகுது!

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களில் கிடைக்கும் பிரீமியம் டிசைனுக்கு நிகராக ஹானர் நிறுவனத்தின் அப்கம்மிங் மாடல்களான ஹானர் 500 சீரிஸ் (HONOR 500 Series) வெளியாக இருக்கிறது. டிசைன், கலர், கேமரா விவரங்கள் உறுதியாகிவிட்டன. இப்போது, ப்ரோ மாடலின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. பெரிய பேட்டரி மற்றும் கேமரா கொண்ட மாடலாக இது இருக்கப் போகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனில் கிடைத்த அரிசோன்டல் கேமரா டிசைன், சாம்சங் நிறுவனத்தை விட மலிவான பட்ஜெட் ஆகியவை ஹானர் 50 சீரிஸ் மாடல்களில் கிடைக்க இருக்கிறது. இதில் ஹானர் 500 (HONOR 500) மற்றும் (HONOR 500 Pro) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. வருகிற நவம்பர் 24ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப கலர், டிசைன் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன.

இனி ஆப்பிள் இல்ல.. சாம்சங் இல்ல.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி!

இது கிட்டத்தட்ட ஐபோன்களை போலவே இருக்கின்றன. இதில் 200 எம்பி போர்ட்ராய்டு கேமரா மற்றும் ஏஐ பட்டன் (AI ​​Button) உறுதி செய்யப்பட்டது. கலர்களை பார்க்கையில், 2 மாடல்களிலும் அக்வாமரைன் (Aquamarine), ஸ்டார்லைட் பிங்க் (Starlight Pink), அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் மூன்லைட் சில்வர் (Moonlight Silver) கிடைக்க இருக்கின்றன.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. ஹானர் 500 ப்ரோ மாடலில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் கூடுதலாக கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே இதுவரை தெரியவந்தது. ஆனால், இப்போது ஹானர் 500 ப்ரோ மாடலின் பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் கசிந்துள்ளன.

ஹானர் 500 ப்ரோ பீச்சர்கள் எப்படி?
இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் (1264 x 2736 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்க இருக்கிறது. 200 எம்பி கேமரா மற்றும் 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க இருக்கிறது.

பெரிய 8000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே லேட்டஸ்ட்டாக கசிந்துள்ளன. முன்னதாக கசிந்த பீச்சர்களை பார்க்கையில், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) கிடைக்க இருக்கிறது. 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ வர இருக்கிறது.

முன்னதாக வெளியான ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் கிடைத்தது. 6.55 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் அலுமினோசிலிகேட் கிளாஸ் (Aluminosilicate Glass) புரொடெக்சன் கிடைத்தது. 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

மேலும், 50 எம்பி போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா கிடைத்து. 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டது. 7200mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. சீன மார்கெட்டில் ரூ.40,310 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, ஹானர் 500 ப்ரோ மாடலை ரூ.45,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 500 Pro With 200MP Camera 8000mAh Battery 16GB RAM Tipped Ahead of China Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X