Home
Mobile

உலக நாடுகள் அனைத்தும் இந்த போனை பற்றிதான் பேசிட்டு இருக்கு.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 500 ப்ரோ ப்ரோ (Honor 500 pro) ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 24-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.

இந்நிலையில் ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா, சிப்செட் உள்ளிட்ட பல முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த போனை பற்றிதான் பேசிட்டு இருக்கு..

ஹானர் 500 ப்ரோ அம்சங்கள் (Honor 500 Specifications): 50எம்பி சோனி IMX858 பெரிஸ்கோப் கேமரா + 200எம்பி சாம்சங் HP3 பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 6.55-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் இந்த புதிய ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

குறிப்பாக IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் இந்த ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி உடன்அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் (3D ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 500 Pro camera specifications leaked: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X