இறங்கி அடிச்ச Honor.. 200எம்பி கேமரா.. IP69K ரேட்டிங்.. 8000mAh பேட்டரி.. புது 5ஜி போன் அறிமுகம்..
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 500 (Honor 500) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் 500 அம்சங்கள் (Honor 500 Specifications): 6.55-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே ( LTPO OLED display) வசதியுடன் இந்த புதிய ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2736×1264 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 6000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

200எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் இந்த ஹானர் 500 ப்ரோ உடன் இந்த ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஹானர் 500 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய ஹானர் 500 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் ஹானர் 500 ஸ்மார்ட்போனில் உள்ளது. 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், கலிலியோ,குளோனஸ், என்எப்சி, ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹானர் போனில் உள்ளன.

குறிப்பாக 8000mAh பேட்டரி உடன் ஹானர் 500 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் இந்த போனின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 42 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
ஹானர் 500 விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 500 போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.33,000)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் 500 போனின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.36,000)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் 500 போனின் விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ.41,000)


Click it and Unblock the Notifications








