மொத்த சாம்ராஜ்யமே மிரண்டுடுச்சு.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படி 200 எம்பி கேமரா, 8000mAh பேட்டரி, ஓஎல்இடி டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ஹானர் 500 (HONOR 500) மற்றும் ஹானர் 500 ப்ரோ (HONOR 500 Pro) ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. இந்த மாடல்களின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது.
வருகிற நவம்பர் 24ஆம் தேதி ஹானர் 500 சீரிஸ் (HONOR 500 Series) சீன மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. ஐபோனுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், அந்த மாடல்களை தூக்கி சாப்பிடும்படியான பேட்டரி கேபாசிட்டியுடன் இந்த மாடல்கள் களமிறங்க இருக்கின்றன. கலர் டிசைன் விவரங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

இப்போது, வெளியீட்டு தேதியை ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 200 எம்பி கேமரா, மேஜிக் ஓஎஸ் கிடைக்க இருப்பதும் உறுதியாகிவிட்டது. அக்வாமரைன், ஸ்டார்லைட் பிங்க், அப்சிடியன் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் ஆகிய கலர்களில் அரிசோன்டல் கேமரா டிசைன் கிடைக்க இருக்கிறது. இப்போது, எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பார்க்கலாம்.
ஹானர் 500 அம்சங்கள் (HONOR 500 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் (2736 x 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொண்சி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) உள்ளது.
அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 80W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்பிராரெட் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.
ஹானர் 500 ப்ரோ அம்சங்கள் (HONOR 500 Pro Specifications): இந்த ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் (2736 x 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 9.0 கொடுக்கப்பட இருக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்படுகிறது. இந்த ஹானர் 500 ப்ரோ ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி) + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்856 (SONY IMX856) சென்சார், 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்படுகிறது. 8000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








