Home
Mobile

மொத்த மார்கெட் காலி.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 7200mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பட்ஜெட்டில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 200 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 7200mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஹானர் 400 (HONOR 400) போனானது வெளியாகி இருக்கிறது. 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த ஹானர் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ஹானர் 400 சீரிஸ் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளோபல் மார்கெட்டில் வெளியானபோதே இந்தியாவிலும் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டது. இப்போது, சீனாவில் வெளியாகி இருப்பதால், எந்த வெர்ஷன் இங்கு வெளியாகும் என்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இப்போது, ஹானர் 400 போனின் சீன வெர்ஷனை பார்க்கலாம்.

மொத்த மார்கெட் காலி.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 7200mAh பேட்டரி.. மாடல்?

ஹானர் 400 அம்சங்கள் (HONOR 400 Specifications): இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது.

அலுமினோசிலிகேட் கிளாஸ் (Aluminosilicate Glass) புரொடெக்சன் கொண்ட 6.55 இன்ச் (1264 x 2736 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 3840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

மேலும், ஹெவி ரெய்ன் டச் (Heavy Rain Touch) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஹானர் 400 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 200 எம்பி வை-ஆங்கிள் மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.

மொத்த மார்கெட் காலி.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 7200mAh பேட்டரி.. மாடல்?

மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, 30X டிஜிட்டல் ஜூம், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இதுபோக எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) சப்போர்ட் கொண்ட ஆன்டி-ஷேக் மோட் வருகிறது. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது.

இந்த சீன வெர்ஷனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரி கிடைக்கிறது. பிரீமியம் போன்களில் கிடைக்கும் IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. மூன்-கிராபிங் சில்வர் (Moon-grabbing Silver), குயிக் சாண்ட் பிங்க் (Quicksand Pink), சீ பிரீஸ் ப்ளூ (Sea Breeze Blue), பேண்டசி நைட் பிளாக் (Fantasy Night Black) கலர்கள் உள்ளது.

Take a Poll

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,694ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,259ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,635ஆகவும் இருக்கிறது. இந்த விலைகளானது, சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் விற்பனை தொடங்கிவிட்டது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 400 With 200MP Camera 12GB RAM 7200mAh Battery Launched China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X