மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது புதிய ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் 400 (Honor 400) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த புதிய ஹானர் 400 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் 400 அம்சங்கள்: 6.55-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 400 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் ஹானர் 400 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு கூகுள் ஜெமினி (Google Gemini), சர்க்கிள் டு சர்ச் (Circle to Search), ஏஐ எரைசர் (AI Eraser)உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஹானர் 400 போனில் உள்ளது.
200எம்பி மெயின் சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஹானர் 400 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த ஹானர் 400 மாடல் இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
5300mAh பேட்டரி உடன் ஹானர் 400 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
பிளாக், கோல்டு, கிரே நிறங்களில் ஹானர் 400 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இந்த புதிய ஹானர் போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications