Home
Mobile

மே 22-க்கு அப்புறம் இதுதான்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5300mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த குளோபல் மார்கெட்டும் மிரளும்படியான பீச்சர்களுடன் ஹானர் 400 சீரிஸ் (Honor 400 Series) வெளியாக இருக்கிறது. இந்த மாடல்களின் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் சிப்செட் விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதுபோக சீன வேரியண்ட்டில் பேட்டரி கேபாசிட்டி அதிகமாக கிடைக்கும் என்பதையும் நம்ப தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இந்த ஹானர் 400 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள், சீன வேரியண்ட்டுடன் இருக்கும் வேறுபாடுகள் உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஹானர் 400 5ஜி (HONOR 400 5G) மற்றும் ஹானர் 400 ப்ரோ 5ஜி (HONOR 400 Pro 5G) மாடல்கள் வரும் மே 22ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாடல்களின் பீச்சர்கள் மார்கெட் கசிந்து கவனம் பெற்று வருகிறது. இதே மாடல்கள் சீன மார்கெட்டில் மே 28ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மே 22-க்கு அப்புறம் இதுதான்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5300mAh!

இதனால், குளோபல் மற்றும் சீன வேரியண்ட்களில் ஒரே மாதிரியான பீச்சர்களே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) மூலம் கசிந்த பீச்சர்களை வைத்து பார்த்தால், ஹானர் 400 போனில் பேட்டரியில் அப்கிரேட்கள் இருக்கிறது. அதாவது, குளோபல் வேரியண்ட்டைவிட சீன வேரியண்ட்டில் கேபாசிட்டி அதிகமாக இருக்கிறது.

இதனிடையே குளோபல் வேரியண்ட்களின் டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களும் கசிந்துள்ளன. ஆகவே, இந்த பீச்சர்களை பார்த்துவிட்டு, டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் வெளியான சீன வேரியண்ட்டின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த மாடல்கள் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளதால், இங்கும் இதற்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ஹானர் 400 அம்சங்கள் (Honor 400 Specifications): இந்த ஹானர் மாடலில் 6.55 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வர இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு மேஜிக்ஓஸ் 9.0 (MagicOS 9.0) கொண்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் கிடைக்கிறது.

கேமராவில் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த ஹானர் 400 போனில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5300mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது.

மேலும், IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் வர இருக்கிறது. இந்த பேட்டரிக்கு ஏற்ப 7.3 எம்எம் தடிமன் மற்றும் 184 கிராம் எடை வருகிறது. இதே மாடலானது, சீனாவில் வெளியாகும்போது, 7200mAh பேட்டரியுடன் கிடைக்க இருப்பதாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, சீன வேரியண்ட்டின் பீச்சர்கள் உறுதியாகும் போது, இது தெரியவரும்.

ஹானர் 400 ப்ரோ அம்சங்கள் (Honor 400 Pro Specifications): இந்த ப்ரோ மாடலை பொறுத்தவரை, 1.5K ரெசொலூஷன், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. மேஜிக்ஓஎஸ் 9.0 மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி டெலிபோட்டோ, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

50 எம்பி செல்பீ ஷூட்டர், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஹானர் 400 ப்ரோ மாடலில் IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 8.1 எம்எம் தடிமன் மற்றும் 205 கிராம் எடை வருகிறது. இந்த மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகும் என்பது உறுதியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 400 Series With 200MP Camera 12GB RAM To Launch On May 22 Key Specifications Revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X