தேதி குறிச்சாச்சு! அண்ணன் ரெடி.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 5300mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஹானர் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் எதிர்பார்த்து காத்திருந்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹானர் 400 சீரிஸ் (HONOR 400 Series) மே 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் அறிமுகமாக இருக்கும் இந்த மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை எப்படி? இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாமா? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மே 22ஆம் தேதி லண்டனில் நடக்கும் இவெண்ட்டில் இந்த ஹானர் 400 சீரிஸ் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஹானர் 400 (HONOR 400) மற்றும் ஹானர் 400 ப்ரோ (HONOR 400 Pro) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. 200 எம்பி ஏஐ கேமரா மற்றும் டிசைன் விவரங்களை மட்டுமே ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

டிசைன் விவரங்களை வைத்து பார்க்கையில், ஹானர் 400 மாடலில் பிளாட் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. ஆனால், ஹானர் 400 ப்ரோ மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) மற்றும் கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ப்ரோ மாடலில் மெட்டாலிக்-லைக் ஃபினிஷிங் கொண்ட மிடில் ஃபிரேம் எதிர்பார்க்கலாம்.
ஹானர் 400 சீரிஸ் அம்சங்கள் (HONOR 400 Series Specifications): 200 எம்பி கேமராவை தவிர மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. ஆகவே, ஹானர் 400 போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.55 இன்ச் பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 5300mAh பேட்டரி வருகிறது.
மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், 12 எம்பி அல்ட்ரா வைடு செகண்டரி கேமரா பேக் செய்யப்படுகிறது. இந்த ஹானர் 400 போனுக்கு IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது.
ஹானர் 400 ப்ரோ மாடலை பொறுத்தவரையில், 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதை கர்வ்ட் டிசைனில் எதிர்பார்க்கலாம். மற்ற பீச்சர்கள் முந்தைய மாடலை போலவே 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது.
இந்த ப்ரோ போனில் 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் ஏஐ பீச்சர்களை இந்த கேமராவில் எதிர்பார்க்கலாம். ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஜெமினி (Gemini), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மட்டுமல்லாமல், ஏஐ சம்மரி (AI Summary) உள்ளது.
மேலும், ஏஐ சூப்பர்ஜூம் (AI Superzoom) மற்றும் ஏஐ போர்ட்ராய்டு ஸ்னாப் (AI Portrait Snap), ஏஐ எரைசர் (AI Eraser) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஹானர் 400 ப்ரோ போனில் 5300mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








