சம்பவம் இருக்கு.. 200எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Honor போன்கள்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் 400 (Honor 400) மற்றும் ஹானர் 400 ப்ரோ (Honor 400 Pro) ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 200எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போன்களில் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் 400 அம்சங்கள் (Honor 400 Specifications): 6.55 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் ஹானர் 400 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 chipset) உடன் ஹானர் 400 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் 400 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 66W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவரும்.
ஹானர் 400 ப்ரோ அம்சங்கள் (Honor 400 Pro Specifications): 6.55 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) உடன் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 100W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவரும்.
ஏஐ டிரான்ஸ்லேஷன் ( AI Translation), ஏஐ ரைட்டிங், ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்டிங் (AI Recording) உள்ளிட்ட பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தவலின்படி, இந்த புதிய ஹானர் போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications