Home
Mobile

அடுத்த Honor போன் ரெடி.. 200எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. 100W சார்ஜிங்.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் ஹானர் 400 ப்ரோ (Honor 400 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஹானர் போன் முதலில் உலக சந்தையில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் 400 ப்ரோ அம்சங்கள் (Honor 400 Pro Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அடுத்த Honor போன் ரெடி.. 200எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) உடன் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் இந்த புதிய ஹானர் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேஜிக் ஒஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது.

200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த போனில் இந்த போனில் உள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி மெமரி + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ டிரான்ஸ்லேஷன் ( AI Translation), ஏஐ ரைட்டிங், ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்டிங் (AI Recording) உள்ளிட்ட பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனின் எடை 205 கிராம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

5300mAh பேட்டரி உடன் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.67,700 பட்ஜெட்டில் இந்த ஹானர் 400 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 400 Pro price and specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X