Home
Mobile

ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா! AMOLED டிஸ்பிளே.. 108எம்பி கேமரா.. 35W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 400 லைட்(Honor 400 Lite) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 108எம்பி கேமரா, 256ஜிபி மெமரி, 35W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் விற்பனை குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ஹானர் 400 லைட் அம்சங்கள் (Honor 400 Lite Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. இதுதவிர 3840Hz PWM டிம்மிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

ஆஹா  வந்துட்டான்யா வந்துட்டான்யா! AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா எஸ்ஒசி (MediaTek Dimensity 7025 Ultra SoC) சிடிப்செட் உடன் இந்த புதிய ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஹானர் 400 லைட் போனில் உள்ளன.

ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ கேமரா பட்டன்(AI Camera button), ஏஐ டிரான்ஸ்லேட்(AI Translate) உள்ளிட்ட பல சிறப்பான ஏஐ அம்சங்கள் இந்த புதிய ஹானர் போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in display fingerprint scanner) இதில் வருகிறது. அதேபோல் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளன.

எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் சான்றிதழ் (SGS five-star certification) இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் வருகிறது இந்த ஹானர் 400 லைட் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

5230mAh பேட்டரி உடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மர்ரட்போனின் எடை 171 கிராம் ஆகும். மார்ஸ் கிரீன் (Mars Green), வெல்வெட் பிளாக் (Velvet Black) மற்றும் வெல்வெட் கிரே (Velvet Gray) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த போனின் விற்பனை விவரங்கள் வெளியாகும். அதேபோல் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 400 Lite launched globally: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X