Home
Mobile

HONOR 400 லைட் 5ஜி போன் அறிமுகம்.. 108எம்பி கேமரா.. 5230mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. என்ன விலை?

ஹானர் 400 லைட் (Honor 400 Lite) ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உலக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய போன் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 108எம்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் 400 லைட் போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.

இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இந்த புதிய ஹானர் போனின் விலை 299 Euros (இந்திய மதிப்பில் ரூ.29,195) ஆக உள்ளது. விரைவில் இந்த புதிய போன் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

HONOR 400 லைட்  5ஜி போன் அறிமுகம்.. 108எம்பி கேமரா.. என்ன விலை?

ஹானர் 400 லைட் அம்சங்கள் (Honor 400 Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா எஸ்ஒசி (MediaTek Dimensity 7025 Ultra SoC) சிடிப்செட் உடன் இந்த புதிய ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி, 3840Hz PWM டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

புதிய ஹானர் 400 லைட் 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஹானர் 400 லைட் போனில் உள்ளன.

அதேபோல் ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ கேமரா பட்டன்(AI Camera button), ஏஐ டிரான்ஸ்லேட்(AI Translate) உள்ளிட்ட பல சிறப்பான ஏஐ அம்சங்கள் இந்த புதிய ஹானர் போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in display fingerprint scanner) இதில் வருகிறது. IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் சான்றிதழ் (SGS five-star certification) இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் வருகிறது இந்த ஹானர் 400 லைட் போன். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 5230mAh பேட்டரி உடன் ஹானர் 400 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மர்ரட்போனின் எடை 171 கிராம் ஆகும். மார்ஸ் கிரீன் (Mars Green), வெல்வெட் பிளாக் (Velvet Black) மற்றும் வெல்வெட் கிரே (Velvet Gray) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Honor 400 Lite launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X